வாரணாசியில் நெரிசலில் சிக்கி உயிர் துறந்தோரர் குடும்பங்களுக்கு பிரதமர்
அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். நேரம் செல்லச்செல்ல கூட்டமும் அதிகரித்ததால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில், பலர் கூட்டத்திற்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பிற்பகல் நிலவரப்படி 14 பேர் இறந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வாரணாசியில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி ஆழ்ந்த கவலை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கூறியுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசு சார்பிலும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னம்பலம்,காம்
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தோருக்கும் நிவாரணம் வழக்கப்படும் என்று கூறியிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை ஒட்டியுள்ள டோம்ரி கிராமத்தில் இன்று பாபா ஜெய் குருதேவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். ராஜ்காட் பாலத்தின் வழியாக அவர்கள் சென்றபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நடந்த சென்றவர்களுடன் வாகனங்களும் ஒருசேர சென்றதால் முன்னும்பின்னும் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஒருவரையொருவர் நெட்டித்தள்ளியபடி முன்னேற முயன்றனர்.
அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். நேரம் செல்லச்செல்ல கூட்டமும் அதிகரித்ததால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில், பலர் கூட்டத்திற்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பிற்பகல் நிலவரப்படி 14 பேர் இறந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வாரணாசியில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி ஆழ்ந்த கவலை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கூறியுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசு சார்பிலும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னம்பலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக