டிராய் வெளியிட்டுள்ள 4ஜி வேகம் குறித்த விபத்தில் ஏர்டெல் 11.4 எம்பிபிஎஸ்( mbps) கொண்டதாகவும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 7.9 எம்பிபிஎஸ் கொண்டதாகவும், ஐடியா 7.6 ம்பெிபிஎஸ் கொண்டதாகவும், வோடபோன் 7.3 எம்பிபிஎஸ் கொண்டதாகவும் உள்ளன. அதே சமயம் ஜியோ 4ஜி சேவையின் வேகம் 6.2 எம்பிபிஎஸ் கொண்டதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் டிராயின் இந்த புள்ளிவிபரத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
எதன் அடிப்படையில் இந்த வேகம் குறித்த அளவீடு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு செய்து வருகிறோம். ஆய்விற்கு பிறகு அது குறித்து விபரத்தை டிராயிடம் அளிக்க உள்ளோம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது
வேகம் குறித்த விபரங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கழகமான டிராய் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஏர்டெல், ஐடியா, செல்லுலார், வோடபோன் ஆகிய நிறுவனங்களின் 4ஜி சேவை வேகத்துடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவையின் வேகம் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமலர,காம்
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு இலவச அழைப்புகள், மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டில் 25% கட்டணம், 1ஜிபி 4 ஜி டேட்டாவின் விலை 50 ரூபாய் மற்றும் ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து என ஏராளமான சலுகைகளை ஜியோ வழங்கியது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் விற்பனையில் கடும் சரிவை சந்தித்தன. இதனால் ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மற்ற நிறுவனங்கள் மேல் முறையீடு செய்தன. இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் 75% அழைப்புகள் இணைக்கப்படுவதில்லை என்றும், இதற்கு மற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மையே காரணம் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக