வெள்ளி, 21 அக்டோபர், 2016

காஷ்மீர் பேருந்து விபத்து 24 பேர் இறப்பு .. kashmir ,gorji distirct accident 24 dead and 33 injured

நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம்
ரியாசி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திலிருந்து புக்கிள் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் பள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்திய விமானப்படை ஹலிகாப்டர் மூலமாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் துரதிருஷ்டவசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: