படேல்
இட ஒதுக்கீடு போராட்டத்தின் தலைவரான ஹர்திக் படேல், டெல்லி முதலமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தன் சமூகம் ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் நான்கு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
எழுதியிருக்கும் கடிதத்தில், படேல் இன மக்களுக்கு ஓ.பி.சி. அந்தஸ்தும், இட
ஒதுக்கீடும் வேண்டும் என்ற கோரிக்கைக்கு கெஜ்ரிவால் ஆதரவளித்ததற்கு
பதிலாக, பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி, கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவளிக்கிறது
என்று எழுதியிருக்கிறார். படேலின் உதவியாளர்கள், மெஹ்சானாவில் வெள்ளி இரவு
இக்கடிதத்தை கெஜ்ரிவாலிடம் அளித்திருக்கின்றனர்.
குஜராத்தின் ஜனநாயகத்தை பாஜக நொறுக்கியிருப்பதால், பதிதார் சமூகத்தின் பிரச்னைகளை டெல்லியில் ஆலோசிக்கவே, டெல்லி முதலமைச்சரை அணுகியிருக்கிறார் 23 வயதான ஹர்திக் படேல். கடந்த வருட போராட்டங்களில்போது போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டால் கொல்லப்பட்ட பதிதார்கள் குறித்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மெஹ்சானாவில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை கெஜ்ரிவால் சந்தித்தார். வரும் ஞாயிறன்று சூரத்தில் பேரணி நடத்தவிருக்கிறார். மினன்ம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக