ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ரஷ்யாவிடம் கைமாறிய எஸ்ஸார் ஆயில்!


இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆயில் நிறுவனமான எஸ்ஸார் ஆயில் ரூ,72,800 கோடிக்கு ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட் ஆயில் மற்றும் டிராஃபிகுரா குழுமத்திடம் கைமாறியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் நேற்று கோவாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கையெழுத்தாகின. இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரஷ்யாவிலிருந்து போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் நடந்த மற்றொரு மிகப்பெரிய ஒப்பந்தம் எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரஷ்யாவிடம் கைமாறிய ஒப்பந்தம் ஆகும். எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் 98 சதவிகிதப் பங்குகளை ரூ.72,800 கோடிக்கு ரஷ்யாவின் ரோஸ்னெஃப்ட் ஆயில் நிறுவனமும் டிராஃபிகுரா குழுமமும் இணைந்து தலா 49 சதவிகிதப் பங்குகளை கைப்பற்றியுள்ளன.

இந்த ஒப்பந்தத் தொகையில் எஸ்ஸார் நிறுவனத்தின் 4.5 பில்லியன் டாலர் (ரூ.27,000 கோடி) ஒட்டுமொத்த கடனும், துறைமுகத்துக்கு வழங்கவேண்டிய 2 பில்லியன் டாலர் (ரூ.13,300 கோடி) கடனும் சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்ஸார் ஆயில், ரஷ்யாவிடம் கைமாறியுள்ள இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அயல்நாட்டு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam,kaam

கருத்துகள் இல்லை: