சமீபத்தில் தந்தி டிவி பிரதமர் நரேந்திர மோடியின் “ஜெய் ஸ்ரீராம்
முழக்கம்” குறித்து விவாதம் ஒன்றை நடத்தியது. இதில் முன்னாள் ஐஏஎஸ்
கிறிஸ்துதாஸ் காந்தி, மத சுதந்திரம் உள்ள நாட்டில் நாத்திகர்களுக்கு ராமரை
செருப்பால் அடிக்கும் உரிமையும் உண்டு எனப் பேசினார். இது இந்துத்துவ
அமைப்புகளால் கண்டனத்துக்கு உள்ளானது. பகுத்தறிவாளர்கள் பலர் கிறிஸ்துதாஸ்
காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம்
அளித்து, யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக பொதுமன்னிப்பு
கேட்பதாகவும் கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கும் செய்தியை வெளியிட்ட தினமலர், ஊடக அறத்துக்கு மாறாக, பாதிப்புக்கு(கண்டனத்துக்கு) உள்ளானவரின் முகவரியை பகிரங்கமாக அச்சில் ஏற்றியுள்ளது. இந்துத்துவ அமைப்புகளை ஆதரிக்கும் தினமலரின் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. அறமற்றது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக