
பசில் அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகி விட்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து சுய நினைவை இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கோர விபத்தால் ஆசிரியரின் இரு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஒரு கால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அதனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
பின்னர் இரத்தம் ஏற்ற மருத்துவர்கள் முற்பட்ட வேளை அவரின் சில உறவுகள் மற்றும் மதப் பெரியவர்கள் அதனை மறுத்து, தங்கள் மதத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும்
இவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் படுகாயமடைந்து
மருத்துவமனையில் சேர்க்கப்படும் பட்சத்தில் அவரது மதமோ, இனமோ,
கலாச்சாரத்தையோ தாங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்றும். உயிரை எப்படியாவது
காப்பாற்றுவது தான் தமது இலக்கு எனவும் சிகிச்சையளித்த
மருத்துவர்கள் விடாப்பிடியாக நின்றுள்ளனர்.
மதங்கள் மனிதனை வாழ வைக்கவே அன்றி சாகடிக்க அல்ல. ஆசிரியரின் மனைவியும் கோமா நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு மிகத் திறமையான ஆசிரியரின் பிரிவால் எங்களது மாணவர்
சமுதாயம் துடிதுடித்துப் போயுள்ளது. வணிகத் துறையில் தனக்கென தனி
முத்திரை பதித்து மூன்று தலைமுறைகளாக ஆயிரமாயிரம் சிறந்த நன்
மாணாக்கர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கிய பசில் ஆசிரியரின் பிரிவை
இன்னமும் ஜீரணிக்க முடியாமல் மாணவர்கள் தவிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக