செவ்வாய், 18 அக்டோபர், 2016

விரைவில் முதல்வர் போயஸ் கார்டன் ..புதிய சிகிச்சை கருவிகள் அங்கு பொருத்தப்படுகிறது

“தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் என்ன என்பதுபற்றி சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவகுமாருக்கு தெளிவாகத் தெரியும். இந்த சிகிச்சைகளை வீட்டில்வைத்தே கொடுக்கலாமா என்பதுபற்றி, டாக்டர் சிவகுமாருடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘அக்கா ஹாஸ்பிட்டலுக்கு வந்து மூணு வாரம் ஆகிடுச்சு. இதுக்குமேலயும் அவுங்கள ஹாஸ்பிட்டல்லயே வச்சிருக்கிறது எனக்கு சரியாப் படல. அதுவுமில்லாம, தீபாவளி சமயத்துல அவுங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கக் கூடாது. இவ்வளவு நாள் அக்கா கார்டனை விட்டு எங்கேயும் வெளியில் தங்கினதேயில்ல. ஒருவேளை, அவங்கள நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டா அதுவே அவங்க உடல்நிலையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.
டாக்டர் சிவகுமார் இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் பேசியிருக்கிறார். அவர்கள் சில ஐடியாக்களை சொல்லியிருக்கிறார்கள். பிறகு, போயஸ் கார்டனுக்குப் போன டாக்டர் சிவகுமார் அங்கே ஜெயலலிதா தங்கும் முதல் தளத்தில் சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார். போயஸ் கார்டனில் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்துக்குச் செல்ல லிஃப்ட் வசதி உண்டு. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து முதல்வரை ஸ்ட்ரெச்சரில் வீட்டுக்கு கொண்டுவந்தால் முதல் தளத்துக்குச் செல்லுமளவுக்கு அது பெரிய லிஃப்ட் கிடையாது. அதனால் ஸ்ட்ரெச்சர் ஏற்றுமளவுக்கு போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டை மாற்றியமைக்கும் பணிகள் விறுவிறுவென தொடங்கிவிட்டது. இந்தப் பணிகளை சசிகலாவும் நேற்று இரவு போயஸ் கார்டன் சென்று நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கேரளாவில் உள்ள ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் ஆலோசனையும் கேட்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சொன்ன ஐடியா படி, வரும் 27ஆம் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு மாற்றுவது திட்டமாம்’’ என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. அதைப் படித்து ஷாக் ஆன வாட்ஸ் அப், ‘இதெல்லாம் சாத்தியமா?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது. பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக்.
  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: