சனி, 22 அக்டோபர், 2016

இன்றைய அப்போலோ எபிசொட் . அம்மா விரைவில் பூரண குணம் அடைவார் !


ஒரு மாத காலமாக அப்பல்லோவின் அவசர சிகிச்சை உயிர் காக்கும் கருவிகளோடு போராடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வின் உடல்நிலையில் எந்தளவு முன்னேற்றம் இருக்கும் என்பது குறித்து சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பல மருத்துவர்களைக் கேட்டோம். புனித இசபெல்லா மருத்துவமனையில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவின் டாக்டர் ஒருவர் நம்மிடம், " இத்தகைய நிலையில்தான், அவரை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் என்பதை நக்கீரன் வெளியிட் டுள்ள முதல்வரின் மருத்துவக் குறிப்பேடுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதனடிப்படையில் பார்த்தால் முதலில் அவருக்கு இதயத்துடிப்பை வேகப்படுத்தும் கருவிகளை தற்காலிகமாக பொருத்தினார்கள். அதையே பின்னர், அவர்கள் நிரந்தர மாக்கி இருக்கிறார்கள். அதேபோல் மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை லேசாக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தியிருக்கிறார் கள். வாய்வழியாக ட்யூப் மூலம் உணவு, மருந்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வரும் தொற்று நோய்க்கு என்ன காரணம் என நோய் பாதித்த பகுதிகளில் உள்ள கிருமி களை பிரித்தெடுத்து அதை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பார்கள். அந்த நோய்க்கிருமி எந்த மருந்து செலுத்தினால் அழியும் என ஆராய்ச்சி செய்து, அந்த மருந்தை நோயாளிக்கு செலுத்தி முத  லில் அவரது தொற்று நோய் கிருமிகளை அழிப்பார்கள். அந்த நோய்த் தொற்று நீங்கும் வரை நோயாளியின் உடல்நிலையை சீராக பராமரிப்பார்கள். இதுதான் அவசரகால சிகிச்சையின் முக்கிய அம்சம். இதில்தான் செயற்கை சுவாசம்- செயற்கை இதய துடிப்பு ஊக்குவிப்பு எந்திரம் ஆகியவை உபயோகப்படுத்தப் படுகிறது. இதற்காகத்தான் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் வருகை தந்தார்.

இவரைப் பற்றி லண்டனில் இருக்கும் எனது நண்பர்களான உயிர் காக்கும் அவசர சிகிச்சை நிபுணர்கள் பேசும்போது, "எக்மோ (ECMO) எனப்படும் மருத்துவ கருவியை உபயோகிப்பதில் ரிச்சர்டு பெரிய நிபுணர்' என்கிறார்கள். "ECMO  என்பது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து அதிலுள்ள ஆக்சிஜன் அளவை அதிகப் படுத்தி உடலுக்குள் திருப்பி அனுப் பும் கருவி. அதிகமான நோய் தொற்று ஏற்பட்டு உடலுக்குள் உள்ள ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையுமானால் அந்த நோயாளிகளை ECMO கருவிக் குள் கொண்டு வருவோம். முதல்வருக்கு ரிச்சர்டு பேல் சிகிச்சை அளிக்கிறார் என்றால் நிச்சயம் ECMO கருவியை ஜெ.வுக்கு பொருத்திதான் சிகிச்சை அளித்திருப்பார்' என்கிறார்கள் இங்கிலாந் தில் உள்ள மருத்துவர்கள். உயிர் காக்கும் சிகிச்சை யின் மிக உயர்ந்த சிகிச்சையான ECMO  சிகிச்சைக்கு ஒரு நோயாளியை உட்படுத்துவதும் அதிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவதும் மிகக் கடின மான மருத்துவப்பணி. அந்த சிகிச்சையின் போது எந்த அசைவும் இல்லாமல் நோயாளி படுத்திருப் பார். அதனால்தான் இந்த சிகிச்சையின் போது வதந்திகள் பரவியிருக்கக் கூடும். அதற்குப் பிறகு டிராக்கோஸ்டமி (Trachaeostomy) செய்து அவரை செயற்கை சுவாச வென்டிலேட்டர் கருவி மூலம் வைத்திருப்பது என்பது... முதல்வரின் உடல்நிலை யில் முன்னேற்றம் என்றுதான் கூற வேண்டும். டிராக்கோஸ்டமி டியூப் மூலம் சிகிச்சை பெறும் நபர் சுயநினைவு வரும்போது பேச முயற்சிக்க முடியும்'' என்கிறார் விரிவாகவே.

அப்பல்லோ மருத்துவமனை ஜெ.வுக்கு அளிக்கும் பாசிவ் பிசியோதெரபி பற்றி டாக்டர்களி டம் கேட்டபோது, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர் ஒருவர் நம்மை அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளியிடம் அழைத்துச் சென்றார். உணவுக்கு ஒரு குழாய், மூச்சுக்கு ஒரு குழாய் என உடலில் உருவாகும் கழிவுகளை வெளியேற்ற தேவையான கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார் அந்த நோயாளி. தலையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த நபரின் மார்பை கைகளால் அமுக்கி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள் டாக்டர்கள். இதுதான் பாசிவ் பிசியோதெரபி என்று நம்மிடம் சொன்னார்கள்.

ஜெ.வுக்கு இதயம் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதும் அவரது நுரையீரல் சுருங்கி விட்டது. செயற்கை சுவாச முறையில் சிகிச்சை பெறும் அவர், இயற்கையாக சுவாசம் பெற வேண்டுமென்றால் அவரது நுரையீரல் பகுதியிலுள்ள நெஞ்சு தசைகள் வலுப்பெற வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் அடங்கியுள்ள நெஞ்சுப்பகுதி தசைகள் விரிவடைய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி தடையற்ற முறையில் சுவாசிக்க மருத்துவர்கள் கைகளால் நெஞ்சுப் பகுதியை மசாஜ் செய்து, நோயாளியின் சுவாசத்தில் உள்ள தடைகளை நீக்கி உயிர் பிழைக்க செய்வார்கள்.<>நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வேலையை செய்வதற் கென எந்திரங்கள் வந்துவிட்டன. அதில் சில எந்திரங்கள், மனிதர்களை போல செயல் படும் ரோபோடிக் தன்மையைக் கொண்டுள் ளன. அந்த நாடுகளில் இதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு இந்த பாசிவ் பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படும். அந்த எந்தி ரங்களை ஜெ.வுக்கு சிகிச்சையளிக்க அப்பல்லோ நிர்வாகம் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்த உயிர் காக்கும் கருவிகள் சப்ளையர்கள், அதுபோன்ற எந்திரங்களின் மாடல் களை நமக்கு காண்பித்தார்கள். ""ஜெ.வை பாதித்த நுரையீரல் தொற்று நோயுடன் பல நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். ஒரே வாரத்தில் அவர்களை குணப்படுத்தியிருக் கிறோம்'' என்கிறார்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள். ஆனால் நுரையீரல் தொற்று, யூரினரி டிராக் இன்பெக்ஷன் என ஆரம்பித்த ஜெ.வின் நோய்கள் வளர்ந்து இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்களை பாதிக்கும். ஙஞஉந எனப்படும் நோயாக மாறியதால்தான் குணப்படுத்துதல் தாமதமாகிறது என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள். தற்பொழுது ஜெ. செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சுவாசிக்கிறார். சுய நினைவுடன் இருக்கிறார் என்பது மட்டும்தான் அப்பல்லோ மருத்துவமனை வெளிப்படுத்தும் செய்தியாக உள்ளது.<">இந்நிலையில், தீபாவளிக்கு ஜெ. போயஸ் கார்டன் போகிறார்- 27-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிறார் என செய்தி கள் கொடிகட்டி பறக்கின்றன. அதைப்பற்றிக் கேட்டபோது, ""முதல்வருக்கு உடல்நிலை சரியானால் அடுத்த நிமிடமே நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்யத் தயார். அதற்குத் தான் காத்திருக்கிறோம்'' என நம்பிக்கையுடன் சொல் கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள். தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கோவில்களிலும் ஞாயிறு காலையில் பூஜை செய்ய உத்தரவிட்ட சசிகலா... அந்த பூஜை நடந்ததிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிடாமலும் பேசா மலும் விரதம் இருந்த தாக சொல்லும் அவரது உறவினர்கள் ஒவ் வொரு முறை சுய நினைவு வந்து ஜெ. கண் விழிக்கும் போதும் சசிகலாவை பார்த்து கண்ணீர் விடுகிறார் என்ற தகவலை யும் கூடுதலாகக் கூறுகின்றனர்.">ஜெ.வின் உடல்நிலை பற்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த டாக்டர் கார்த்தி சிவக்குமார் மற்றும் அவரது தந்தை டாக்டர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ""அம்மாவின் உடல்நிலை நன்றாக முன்னேறி இருக்கிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார்'' என்றார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய மாஜி அமைச்சர் பொன்னையன், ""விரைவில் முதல்வர் தனது வழக்கமான அரசியல் பணிகளை மேற்கொள்வார்'' என்றார்.<">ஜெ. குணமடைந்து வீடு திரும்புவார் என்கிற மருத்துவ அறிக்கையை எதிர்பார்த்து அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.">-தாமோதரன் பிரகாஷ்<">படங்கள் : ஸ்டாலின், அசோக் விகடன்,காம்

கருத்துகள் இல்லை: