சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள
எஸ்.ஆர்.எம். கல்லூரி
விடுதியில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ் என்ற மாணவர் பயோ கெமிக்கல் பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தேர்வில் தோல்வியடைந்ததால் ஆசிரியர், பெற்றோரை அழைத்து வரச் சொல்லியுள்ளார். இந்நிலையில், லோகஷ் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் பயிலும் சக மாணவர்களைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் தற்கொலைக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் மீது வரும் புகார் முதன்முறை கிடையாது. பல முறை இதுபோன்ற சம்பவங்கள் அங்கு நடந்துள்ளதாகவும் அதை நிர்வாகம் மறைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. மேலும், கல்லூரியில் மட்டுமில்லாது எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் நடத்தும் பள்ளியிலும் மரணம் ஏற்படுகிறது. கடந்த 7ஆம் தேதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் பள்ளியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து லோகமித்ரா என்ற ஒன்பது வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கலாம். கடந்த வாரம் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் சென்ற கார் சென்னை மறைமலை நகர் அருகே சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி இறந்துள்ளனர். இவை அனைத்துமே, நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மின்னம்பலம,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக