புதுதில்லி, அக். 22 –
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்களவை துணை சபாநாயகர்
தம்பிதுரை மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவர உள்ளதாக சசிகலா புஷ்பா எம்.பி. கூறியுள்ளார். திருச்சி சிவா எம்.பி.யுடனான மோதலையடுத்து, தன்னை முதல்வர் ஜெயலலிதாவிடம் அழைத்துச் சென்றபோதும், பின்னர் தில்லிக்கு அழைத்துச் சென்ற போதும் பெண் மற்றும் எம்.பி. என்ற வகையில் எனக்குரிய மரியாதையைத் தம்பிதுரை அளிக்கவில்லை; அவர் என்னைக் கைதி போல நடத்தினார்; எனவே, அவர்மீது குளிர்காலக் கூட்டத் தொடரின்போது உரிமை மீறல் புகார் தெரிவிப்பேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக, தமிழகத்தில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றியும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக