செவ்வாய், 17 மே, 2016

வைகோ சொல் அத்தனையும் அமிர்தம்... டவுட்டு இருந்தா பிறேமலதா கிட்ட கேட்டு பாருங்க ..

வைக்கோ செய்த புண்ணியம்..
அவரு போற இடமெல்லாம், பொன் துலங்கும்....
அவரோடு சேருற எல்லாருமே
அவரை போலவே சொக்க தங்கமா
தகதன்னு மின்னுவாங்க...
அவரு அப்படி ஆக்கிடுவாரு..
அவரோட ராசி அப்படி.....
மகராசன், கைராசிக்காரன்...
ஆனா என்ன ஒன்னு...
சத்தம் மட்டும் பெருசா கேக்கும்,
வண்டி நகரவே நகராது.....
அப்படி ஸ்ட்ராங்கா புதைகுழியில் நிக்கிற மனுஷன்.....
முன்னே போறவங்களையும் கூப்பிட்டு
'நான் கிங் ஆக்குறேன் வாங்க' என்று
ஆசை வார்தையெல்லாம் காட்டி,
தன்னோடவே புதைகுழியில் கொண்டு
வந்து நிலையா நிக்க வச்சிருவாரு....

அப்படி புதைகுழியில் கூப்பாடு போட்டு
கொண்டு நிற்கும் ஸ்ட்ராங்கான மனிதன் தான்
வைக்கோ என்ற அதிபுத்திசாலி....
வெளியில் மழை பெய்தால்,
வீட்டுக்குள் குடை பிடிப்பார்...

நல்ல வெயில் அடிச்சா, பனைமரத்துக்கு
கீழே போய் ஒதுங்குவார்.....
தாகத்துக்கு தண்ணி குடுத்தா,
நான் இதெல்லாம் குடிக்க மாட்டேன்,
கழுதை மூத்திரம் இருக்கா என்று கேட்ப்பார்....
பசிக்கு சாப்பாடு போட்டா, உங்க வீட்டில
வைக்கோல் இல்லையா என்று கேட்ப்பார்.
எல்லோரும் காற்றுள்ள போது தூற்றிகொள் என்பார்கள்.....
ஆனால், இவரோ, காற்றுள்ள போது பஞ்சை
பிச்சிபோட்டு ஊதி விளையாடுவார்....
தீகாற்று தெற்க்கிலிருந்து வடக்கு
நோக்கி வீசுகிறது என்றால்,
இவர் வடக்கிலிருந்து தெற்கு
நோக்கி தீயை நோக்கி வீரமாக நடப்பார்....
அப்படியெல்லாம் மாற்றி யோசிக்கும்
முற்றிலும் மாறுபட்ட ஒரு அற்புத மனிதர்..
அவர் தான் வைக்கோ என்ற மகராசன்.....
Sumi B facebook

கருத்துகள் இல்லை: