ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.
விஜயகாந்த் டெபாஸிட் இழந்தார்:
அது போல் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து நின்ற சுயேட்சை ஸ்டாலின் குமார் 83 வாக்குகள் பெற்று உள்ளார்.
தேர்தலில் மக்களை குழப்ப, பிரதான வேட்பாளர் பெயரில் இன்னொரு வேட்பாளரை நிறுத்துவதென்பது கட்சிகள் கையாளும் ஒரு யுக்தி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, அன்புமணி பெயரில் அன்புமணியை எதிர்த்து இன்னொரு வேட்பாளர் நின்றார். ஆனால், இதுவரை இதுபோன்ற யுக்தி வாக்கு சதவீதத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை. ஆனால், இம்முறை ஒரு வேட்பாளரின் வெற்றியையே அது பறித்துவிட்டது.
- மு. நியாஸ் அகமது விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக