டாஸ்மாக்' மூடல் படிப்படியாக எப்படி?
'டாஸ்மாக்' கடைகள் நேரம் குறைப்பு திட்டத்தை, வரும் காந்தி ஜெயந்தி நாள் முதல் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக
அரசின் டாஸ்மாக் கடைகளில், போலி சரக்கு; மதுவில் கலப்படம் செய்தல்; 'குடி
'மகன்கள் விரும்பும் மது வகைகளை விற்காதது; அரசு நிர்ணயித்துள்ளதை விட,
அதிக விலைக்கு விற்பனை செய்தல் என, பல முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு
அதிகாரி களும், அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளனர்.
அதிக
எண்ணிக்கையில் மதுக்கடைகள் இருப்ப தால், சிறுவர்கள், பெண்கள் என, பலரும்
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடிமக்கள் அனைவரும் போதையில்லாமல் குடிக்காமல் சரியாக ஒட்டு போட்டுவிட்டார்கள்.. நிதானமானவர்கள் குடிக்காமலேயே அலட்சிய போதையில்
ஓட்டுக்களை அங்குமிங்கும் போட்டார்கள் விளைவு.. டாஸ்மாக் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது குடிச்சு குடிச்சு சீக்கிரம் மோடி சொன்ன சோமாலியா லெவலுக்கு
இதனால், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தின. சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும், இதே பிரச்னையை முன்வைத்து, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது விலக்கு அமல்படுத்தப்படும்' என, அந்த கட்சிகள் வாக்குறுதி அளித்தன.
தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சியை பிடித்து, முதல்வராக ஜெயலலிதா, 23ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதனால், மதுக்கடை நேரம் குறைப்பு குறித்த அறிவிப்பை, விரைவில் வெளியிட, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசுக்கு, மது விற்பனையால், ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரியாக, ஆண்டுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதனால் தான், சமூக ஆர்வலர் சசிபெருமாள் மரணத்தை அடுத்து, எதிர்க்கட்சிகள் பல போராட்டங்கள் நடத்திய போதும், மதுவிலக்கு அமல்படுத்தவில்லை.
ஆனால், மதுக்கடை நேரத்தை, பிற்பகல் 2:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை குறைக்கும் முடிவு, 2015ல் எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை, அதே ஆண்டு, ஆக., 15ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட இருந்தார். ஆனால், ஏதோ காரணத்தால் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில், மதுவிலக்குமுக்கிய பிரச்னையாக இருந்தது. இதனால் தான், மதுவிலக்கை பற்றி பேசாமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப் படும்' என்றார்.
எனவே, அவர் கூறிய படி, முதல் பணியாக, மதுக்கடை நேரம் குறைக்கப்பட உள்ளது. இதை, காந்தி ஜெயந்தி நாளான, அக்., 2ம் தேதி, அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெ., அளித்த உறுதி என்ன?: சென்னை, தீவுத்திடலில், ஏப்., 9ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது, அவர், 'அ.தி.மு.க., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்த உடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்; கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்' என்றார்.
- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக