சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகள்
நீங்கலாக மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்கியது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்களை
தவிர்க்கும் விதமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.38 லட்சம் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில சட்டசபை தேர்தலில் ஒரே கட்டமாக
தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக
நடைபெற்ற அனல்பறக்கும் சனிக்கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
vote
பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக
மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்கியது. இத்தேர்தலில் மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க
உள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 65, 762 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. இதில், 5,417 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குசாவடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 1223 வாக்கு சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 596 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக, 1.38 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றங்களைச் சமாளிக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களையும், 5,142 பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரித்து, 514 அதிரடிப்படைகள் மற்றும் 488 இரவுநேர பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,153 விரைவு நடவடிக்கை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இத்துடன் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்தியப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன. தற்போதைய வாக்குப் பதிவு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல்வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். மே 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்; அத்தொகுதிகளில் 25-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Read more at: http://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக