திங்கள், 16 மே, 2016

இன்று கேரள சட்டசபை தேர்தல் : காங்., - இடதுசாரி பலப்பரிட்சை


திருவனந்தபுரம்:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கேரள சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. கேரள சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. இதில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமை யிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவு கிறது. சட்டசபைக்குள் நுழைந்தே தீருவது என்ற முனைப்புடன், பா.ஜ., மூன்றாவது அணியாக, களமிறங்கியுள்ளது.
உள்ளூர் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர்.காங்கிரஸ் அரசு மீதான ஊழல்களைமுன்னிறுத்தி, இடதுசாரி அணி பிரசாரம் செய்தது. வளர்ச்சி திட்டங்களை வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது. மாற்று அணி என்ற அடிப்படையில் பா.ஜ., ஓட்டு வேட்டையாடியது.

கேரளாவில், சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடு களை, தேர்தல் கமிஷன் சிறப்பாகச் செய்துள்ளது. மொத்தமுள்ள, 140 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப் பட்டன.
அரசியல் ரீதியாக மோதல்நடைபெறும் என கண்டறியப் பட்டுள்ள தொகுதிகளில், கூடுதலாக, துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அசாம், மே.வங்கத்தில்...: அசாம் மாநிலத்தில், 126 தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக சட்டசபை :தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 84.72 சதவீத ஓட்டுகள் பதிவாயின.மேற்கு வங்கத்தில் உள்ள, 293 தொகுதிகளுக்கு, ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஒட்டுமொத்தமாக, 80 சதவீத ஓட்டுகள் பதிவாயின.அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில், வரும், 19ல், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

கருத்துகள் இல்லை: