சென்னை: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்ப வேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்திள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக்
கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு நுழைவுத் தேர்வை அனைத்து
மாநிலங்களிலும் 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய
உச்ச நீதி மன்றம் 9-5-2016 உத்தரவிட்டது.
வசதிகள் குறைவான கிராமப் புற மாணவர்களுக்கும், நவீன
வசதிகள் மிகுந்த நகர்ப் புற மாணவர்களுக்குமிடையே நிலவி வரும் வேறுபாடுகளை
நீக்கவும், அனைவர்க்கும் தொழிற்கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி
வழங்கிடவும், சமூக நீதியை நிலைநாட்டவும், திமுக ஆட்சியில் கடந்த 2006 ஆம்
ஆண்டு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது. அந்தச்
சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 7-3-2007 முதல்
நடைமுறைக்கு வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக
நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமலேயே பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள்
அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கட்டாய நுழைவுத் தேர்வுக்கு பல மாநிலங்களும் எதிர்ப்பு
கிளம்பியதால், மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர்
நட்டா சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். மாநிலங்களின்
கோரிக்கையை ஏற்று உச்ச நீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்படும்
என்று உறுதியும் அளித்தார்.
இந்நிலையில், நேற்று (20-5-2016) மாலையில், இந்த
ஆண்டுக்கு மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு
அவசரச் சட்டம் பிறப்பிக்க விருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாகவும் தகவல் வந்தது.
ஆனால் இந்தத் தகவலையும் செய்தியையும் மத்திய சுகாதாரத்
துறை அமைச்சர் மறுத்து, நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல
விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்றும் ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வை
ரத்து செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக
வெளியான தகவல் ஆதாரமற்றது என்றும் கூறியிருக்கிறார். மாணவர்களின்
முக்கியமான இந்தப் பிரச்னையில் மத்திய அரசு சார்பில் மாறுபட்ட செய்திகளை
வெளியிட்டு, அவர்களை மேலும் மேலும் குழப்பத்திலும், மனக் கவலையிலும்
ஆழ்த்துவது நல்லதல்ல.
மத்திய சுகாதார அமைச்சர் அடுத்து ஏதோ புதிய தகவலை
இன்று (21-5-2016) தெரிவிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. மத்திய
அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முக்கியமான இந்தப்
பிரச்னையைப் பொழுது போக்கும் விளையாட்டாக கருதாமல், தெளிவாகவும்,
உறுதியாகவும் தமிழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டில்
மட்டுமல்லாமல் இனி எப்போதும் இல்லை என்ற நல்ல அறிவிப்பினை உடனடியாக
வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.சென்னை
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்ப வேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக