தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து
கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1
அதிமுகவுக்கு ஆதரவாகவும் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. கனத்த
மழை பெய்தபோதும் சுமார் 70% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் எக்ஸிட் போல் முடிவுகள்
வெளியிடப்பட்டன. மொத்தம் 5 நிறுவனங்கள் வெளியிட்ட இந்த எக்ஸிட் போல்
முடிவுகளில் திமுகவுக்கு 4; அதிமுகவுக்கு 1 ஆதரவாக இருக்கிறது
நியூஸ்நேஷன் நடத்திய எக்ஸிட் போல் முடிவின் படி திமுக கூட்டணி 114 முதல்
118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 95 முதல் 99
இடங்களில் வெல்லும்; தேமுதிக- மநகூ 14; பாஜக- 4 இடங்களிலும் இதர கட்சிகள் 9
தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது.
இந்தியாடுடே- ஆக்சிஸ் மை இண்டியாவின் எக்ஸிட்போல் முடிவின்படி திமுக 124
முதல் 140 இடங்களையும் அதிமுக 89 முதல் 101 இடங்களையும் கைப்பற்றும்.
பாஜகவுக்கு 3; பிற கட்சிகளுக்கு 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும்.
ஏபிபி
ஏபிபி நியூஸ் எக்ஸிட்போல் முடிவுகளின் படி திமுக கூட்டணி 132 தொகுதிகளில்
வென்று ஆட்சி அமைக்கும்; அதிமுக கூட்டணிக்கு 95 இடங்களும் பாஜகவுக்கு 1
தொகுதியும்தான் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்காது.
சாணக்யா
டைம்ஸ்நவ்- சாணக்யா வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவின்படி திமுக 140
தொகுதிகளிலும் அதிமுக 90 இடங்களிலும் வெல்லும்; பிற கட்சிகளுக்கு 4 இடங்கள்
மட்டுமே கிடைக்கும் என்கிறது.
இந்த 4 எக்ஸிட் போல் முடிவுகளில் திமுக கூட்டணி மிக அதிகமாக 140 இடங்களைக்
கைப்பற்றும் என டைம்ஸ் நவ்- சாணக்யா மட்டும் கூறியுள்ளது.
சிவோட்டர்
ஆனால் சிவோட்டர் எக்ஸிட்போல் முடிவுகளோ அதிமுக கூட்டணி 139 இடங்களைக்
கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும்; திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு 78
இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களிலும் பாஜகவுக்கு
ஒரு இடமும் கிடைக்காது என்கிறது சிவோட்டர்.
இன்று வெளியான 5 எக்ஸிட் போல் முடிவுகளில் நியூஸ்நேஷன், இந்தியா டுடே-
ஆக்சிஸ் மை இண்டியா, ஏபிபி நியூஸ், சாணக்யா ஆகிய 4-ம் திமுக ஆட்சியைக்
கைப்பற்றும் என்றும் சிவோட்டர்ஸ் ஒன்று மட்டும் அதிமுகவே ஆட்சியை தக்க
வைக்கும் எனவும் கூறியுள்ளன.
Read more at://tamil.oneindia.com
Read more at://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக