வியாழன், 19 மே, 2016

2016 தேர்தல் வைகோவின் சாணக்கிய வெற்றி ! பெற்றுக்கொண்ட காசுக்கு வேலைபார்த்த Political pimp ?

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும்.
மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே உறுதிபட மறுக்கவில்லை.
மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத் தொடங்கினர்.
அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர் விஜயகாந்த்தை இழுத்தபோதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள கேம் பிளான் என்ற கூற்று வலுப்பட்டது.
இப்போதுதான் சற்று வெளிப்படையாக ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தார் வைகோ. அப்படியும் கூட அவர் மீதான சந்தேகப் பார்வை போகவில்லை. விலகவில்லை.இப்போது கிட்டத்தட்ட எல்லாமே தெளிவாகி விட்டது.  சுப்ரமணியம் சுவாமிக்கு தமிழ்நாட்டில் இவர் ஒரு Sub Contractor  அல்லது ஒரு பீ டீமாக வேலை பார்க்கிறார் என்பது ரொம்ப லேட்டாக தான் எனக்கே(?) தெரியவந்தது
தானும் கெட்டு, தன்னுடன் சேர்ந்தவர்களையும் காலி செய்துள்ளார் வைகோ. தேமுதிக – தமாகா – மக்கள் நலக் கூட்டணி வாங்கியுள்ள வாக்குகளைப் பார்த்தால் மொத்தமாக 6 சதவீதம் கூட வரவில்லை.
இதில் மிகப் பெரிய கேவலம் – தேமுதிகவுக்குத்தான்.ஆரம்பத்திலிருந்தே சாலிடாக வாக்குகளைப் பெற்று வந்தது தேமுதிக. கடந்த தேர்தலில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக.
ஆனால் இன்று அதை காலி செய்துள்ளார் வைகோ.
அதேபோலத்தான் கம்யூனிஸ் கட்சிகள். இரு கட்சிகளும் தலா 2 சதவீத அளவுக்கு வாக்குகளை வைத்திருந்தன. அதையும் காலி செய்து விட்டார் வைகோ.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தையும் பதம் பார்த்து விட்டது இந்தக் கூட்டணி.
எல்லாவற்றையும் ஊற்றி மூடிய மதிமுக கடைசியில் அது வெறும் 0.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி கூட 0.8 சதவீதவாக்குகளைப் பெற்றுள்ளது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.
இப்படி திமுகவுக்கு சாதகமாக போக வேண்டிய வாக்குகளை மிகச் சாதுரியமாக அதிமுக பக்கம் திருப்பி விட்டுள்ளார் வைகோ என்பதே உண்மை.
தேமுதிக மட்டும் திமுகவுடன் போயிருந்தால் நிச்சயம் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும்.
அதைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் திருமாவளவனோ, கம்யூனிஸ்டுகளோ திமுக பக்கம் போய் விடாமலும் தடுத்து அதிமுகவைக் காப்பாற்றியுள்ளார் வைகோ என்பதே உண்மையாகும்.
மொத்தத்தில் தானும் கிணற்றில் விழுந்து, மற்றவர்களையும் குப்புறத் தள்ளி விட்டுள்ளது மதிமுக…
உண்மையில் அதிமுகவினர் வைகோவைத்தான் கொண்டாட வேண்டும்!  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: