சென்னை,மே 19 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு
நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக மீண்டு ஆட்சியைப் பித்து ஜெயலலிதா
முதல்வராவது உறுதியாகிவிட்டது.
தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப் பதிவுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட பல கருத்து கணிப்புகளில் திமுக-வே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக அமைந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் புதுமை, இளைஞர்களை கவர்ந்த விளம்பரங்கள் என்று தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட திமுக-இப்படி தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக அரசியல் ஆர்வலர்கள் பலவற்றை கூறினாலும், அதில் முக்கியமான முழு மதுவிலக்கு அமல்படுத்துவது தான்.
நாட்டுக்கு நல்லது தானே முழு மதுவிலக்கு என்றால், நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அது நல்லதாகவே படவில்லை என்று கூறுகிறார்கள்.
அதாவது தமிழகம் முழுவதும் 6823 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றனர். இந்த அனைத்து மதுபானக் கடைகளிலும் பார்களும் உண்டு. டாஸ்மாக்கில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அதேபோல, பார்கள் நடத்துபவர்கள் மற்றும் அதில் பணி புரிபவர்கள் என்று மதுபானக் கடைகள் மற்றும் பார்களில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.
அதிலும், டாஸ்மாக்கில் பணிபுரிவர்களுக்கு ஊதியம் என்பது குறைவு தான் என்றாலும், ஒரு குவட்டர் பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக எடுத்துக் கொள்வார்கள், இதே ஒரு புல் பாட்டில் என்றால் சுலையாக ரூ.20 எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டு மது வகைகள் விற்பனை செய்யக்கூடிய எலைட் டாஸ்மாக் கடைகளிலும் ஒரு புல் பாட்டிலுக்கு சர்வீஸ் ஜார்ஜ் என்று ரூ.20 எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி 5 ரூபாயில் தொடங்கி 20 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வாங்குவதிலேயே, ஒரு ஊழியருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.1000 வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாக, பாட்டிலில் உள்ள விலையை மட்டும் கொடுத்தால், அந்த நபருக்கு மதுவை கொடுக்க மாட்டார்கள். கூடுதலான ரூ.5 கொடுத்தால் தான் கொடுப்பார்கள். இப்படி சம்பாதிக்கும் ஒவ்வொரு டாஸ்மாக் ஊழியரும் இன்றைய நிலவரப்படி, மாதம் குறைந்தது ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிப்பார்கள். இதுபோதாது என்று, பார் நடத்தும் உரிமையாளர்களுடன் கூட்டணி வைத்து, விடுமுறை நாட்களில் மது விற்பது, ஒரிஜினல் பாட்டிலில் தண்ணீர் கலந்து விற்பது என்று, அனைத்திலும் லாபம் பார்க்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அந்த வேலை இல்லை என்றால் எப்படி இருக்கும்.
சரி, டாஸ்மாக் இல்லை என்றால் மாற்று பணியை அரசு ஒதுக்கினாலும், அதில் இப்படி சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வி அவர்களது மனதில் தோன்றியிருக்கலாம், எனவே தான், மதுவை படி படியாக குறைப்பேன், என்று மறைமுகமாக மதுவிலக்குக்கு நோ, சொன்ன அதிமுக-வை ஆதிரித்திருக்கிறார்கள்.
இவர்கள் இப்படி, என்றால் சில குடிமகன்கள், திமுக வந்தால் சரக்கடிக்க முடியாது என்று நினைப்பிலேயே அதிமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் இந்த வெற்றி அதிமுக-வுக்கு சாதகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல தமிகத்தில் குடி பயக்கத்திற்கு ஆளாகியுள்ளவர்கள் சுமார் 1 கோடி பேர் இருக்கிறார்களாம். இந்த ஒரு கோடி குடிமகன்களும் முழு மதுவிலக்கு அறிவிப்பை வெறுத்திருக்கிறார்கள் என்பதை, சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், மதுவிலக்கு தேவையில்லை என்று 30 சதவீதம் பேர் தெரிவித்தது நிஜமாக்கியுள்ளது.
மொத்தத்தில், ஆட்சியாளர்கள் மக்களுக்கு நன்மை செய்ய முன்வந்தாலும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது தெளிவாகவே தெரிகிறது. chennaionline.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக