புதன், 18 மே, 2016

பழ 'பார்சல்' போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி

நல்ல வேளை சாக்குப்பையில் அனுப்பி மானத்தை வாங்கவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டும்..... கோவை:திருப்பூரில் சிக்கிய, 570 கோடி ரூபாய் ரொக்கம், மூன்று கன்டெய்னர் லாரிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோவை வந்தன. ரூபாய் நோட்டுகள் வங்கியில் எண்ணி சரிபார்க்கப்பட்டன.
லாரிகளில் பணத்தை அனுப்பி வைத்த விவகாரத்தில், விதிமீறல்கள் நடந்துள்ளதாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவையில் இருந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு, 570 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளை, திருப்பூர் தேர்தல் அதிகாரிகள், கடந்த 14ம் தேதி பறிமுதல் செய்தனர்.    ஆந்த்ரா - திராட்சை பழம் - தேர்தல் நேரம் - கண்டெய்னர் லாரி - கோடி கோடியா பணம் - விதி மீறல்கள் - 18 மணி நேரம் - அருண் ஜெட்லி - யோவ் இதுக்கு மேல என்னய்யா க்ளூ வேணும் உங்களுக்கு?.... சரி போகுது.. புரியலைன்னா இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாம்...... ஊழலம்மா - ஐவர் அணி - வீட்டுக்காவல் - 30,000 கோடி - சிறுதாவூர் பங்களா - கண்டெய்னர் லாரி - ஆந்த்ரா - திராட்சை........ - அருண் ஜெட்லி... இப்பவாவது புரியுதா? ஆங்.. அது.


கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' பண பாதுகாப்பு மையத்தில் இருந்து, எடுத்து வரப்பட்டதாக கூறப்பட்டது. இவை, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், ஸ்ரீபுரம், ஸ்டேட் பாங்க் கிளைக்கு கொண்டு செல்வதாக, பண லாரியுடன் வந்திருந்த வங்கி ஊழியர் சூரிரெட்டியும், பாதுகாப்பு போலீசாரும் தெரிவித்தனர்.

எனினும், அதற்கான ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்ததால், பணத்துடன் லாரிகளை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், இரு நாட்களாக நிறுத்தி வைத்திருந்தனர்.இப்பணத்தை உடனடியாக, கோவையிலுள்ள ஸ்டேட் பாங்க் பண பாதுகாப்பு மையத்துக்கே திருப்பி அனுப்பி வைக்குமாறு, வருமானவரித்துறையினர், மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தனர்.

நேற்று காலை, 6:00 மணிக்கு மூன்று கன்டெய்னர் லாரிகளும், திருப்பூர் தெற்கு போலீஸ் உதவிக் கமிஷனர் மணி தலைமையில், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன், கோவைக்கு கொண்டு வரப்பட்டன.பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் பணப் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டு பணம் எண்ணி முடிக்கப்பட்டது.

இதற்கிடையே, 'மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட, 570 கோடி ரூபாய் எங்களுடையது தான்' என, உரிமை கோரிய ஸ்டேட் பாங்க் நிர்வாகம், 'விதிமுறைகளின்படி எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தது தவறு' என, அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் ஆய்வு: கன்டெய்னர் லாரிகளில் இருந்து இறக்கப்பட்ட மரப்பலகையாலான பணப்பெட்டிகள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், 100, 500, 1,000 ரூபாய் நோட்டு பண்டல்கள் எவ்வளவு உள்ளன, பணக்கட்டு மீதிருந்த விவரத்தாள் முத்திரைகளில் எந்த வங்கியின் முத்திரை இடம் பெற்றிருந்தது என வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின். பாதுகாப்பு அறையில் அவை அடுக்கி
வைக்கப்பட்டுள்ளன.

எனினும், பணம் யாருடையது, அடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்பது போன்ற விவரங் களை வெளிப்படையாக தெரிவிக்க வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.வங்கிகளுக்கான பணத்தை, பாதுகாப்பு மையத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு செல்லும்போது, வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் குறித்து, ஓய்வு பெற்ற,வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
* ஒவ்வொரு வங்கிக்கும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஒவ்வொரு ரகசியக் குறியீட்டு எண்ணும், கருநீலம், கரும்பச்சை, வெளிர்சாம்பல் நிறம் போன்ற ஏதாவது ஒரு பிரத்யேக நிறமும் ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த குறிப்பிட்ட வங்கியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பண பண்டல் மீது, அந்த வங்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பிரத்யேக நிற குறியீடு இடம் பெற்றிருக்கும் அல்லது அந்த நிறத்திலான, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருக்கும்.
* ரூபாய் நோட்டு பண்டல்களைநுாலால் கட்ட, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பல ரூபாய் நோட்டுக் கட்டுகளை ஒன்றாக வைத்துக் கட்டப்பட்ட பண்டல்கள் சணல் அல்லது மென்மை யான பருத்திக் கயிறுகளால் கட்டப்பட்டு வருகின்றன.அந்த சணல் அல்லது பருத்திக் கயிறும் கூட, அந்த பண்டல்களை வழங்கும் வங்கிக்கு ஒதுக்கப்பட்ட நிறத்தையே கொண்டிருக்கும்.
* ஒரு வங்கியில் இருந்து, இன்னொரு வங்கிக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது, பணத்தை இரும்புப் பெட்டிகளில் வைத்தே கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில், சாலை விபத்து அல்லது தீ விபத்தில் வாகனம் சிக்கினாலும், பணத்துக்கு சேதம் ஏற்பட்டு விடக் கூடாது.

எந்த ஒரு சூழ்நிலையிலும், மரப்பெட்டிகள், அட்டைப் பெட்டிகளில் வைத்து பணத்தை கொண்டு செல்லக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதி.
* அவ்வாறு இரும்புப் பெட்டிகளில் வைத்து பணத்தை எடுத்துச் செல்லும்போது, அந்தப் பெட்டிகளின் மீதும், சம்பந்தப்பட்ட வங்கியின் பிரத்யேக நிறம் மற்றும் குறியீடுகள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
* கோடிக்கணக்கான ரூபாயை வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும்போது, அவற்றை அனுப்பி வைக்கும் வங்கியின் மேலாளர் மற்றும் பொது மேலாளரின் அனுமதி கடிதம் அவசியம். அதில், வங்கி சார்பில் அந்த பணத்தை யார் எடுத்துச் செல்கிறார் என்ற பொறுப்பான அதிகாரியின் விவரமும் இடம்பெற்றிருக்கும்.
* ரிசர்வ் வங்கியின், பாதுகாப்பு விதிமுறைகளின்படியே, பணத்தை வாகனத்தில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பாதுகாப்பை, உள்ளூர் போலீசாரிடம் கேட்டுப் பெறுவது, பணத்தை அனுப்பி வைக்கும் அதிகாரியின் பொறுப்பாகும். போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை என்றால், பணத்தை அனுப்பி வைப்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரி, கடைசி நேரத்தில் கூட தவிர்த்து விடலாம்.
* பணத்தை கொண்டு செல்லும் வாகனங்களின் பயணப் பாதையை, டிரைவரோ, உடன் செல்லும் பாதுகாப்பு போலீசாரோ மாற்றிவிட முடியாது. முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலேயே செல்ல வேண்டும். இடைவழியில் எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது. குறித்த காலக்கெடுவுக்குள் சென்று, பணத்தை ஒப்படைக்க வேண்டும். வழியில் வாகனத்தில் பழுது ஏதும்ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
* வாகனத்தில் எடுத்து செல்லப்படும் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் முழுவதும் காப்பீடு செய்யப்பட்ட பின்னரே எடுத்துச் செல்லப்படும். இந்த காப்பீடானது தீ விபத்து, வாகன விபத்து, வெள்ள அபாயம், எதிர்பாராமல் நடக்கும் பிற இழப்புகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கொண்டு செல்லப்படும் பணத்துக்கென, பிரத்யேக இன்சூரன்ஸ் பிரீமியம் தொகைகளை செலுத்தும் வசதிகளும் உள்ளன.
* ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவர் வங்கியில் பணம் செலுத்தும்போது, அவரது பான்கார்டு எண்களையும், ஆதார் எண்களையும் கேட்டுப்பெறும் வங்கி நிர்வாகங்கள், கோடிக்கணக்கான பணத்தை மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும்போது முறையான ஆவணங்கள், அடையாளங்கள் இல்லாமல், உறுதி செய்யாமல் எடுத்து செல்ல முடியாது.
* பெரும் மதிப்பிலான நாணயங்களை வாகனங்களில் எடுத்து செல்லும்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் போட்டு, சீலிட்ட பிறகே எடுத்துச் செல்லப் படுகின்றன. இந்த நடைமுறையே, ரூபாய் நோட்டுக்கும் பொருந்தும்.
* 'கன்டெய்னர்' லாரிகளில் பணத்தை எடுத்து செல்லும்போது, அதற்கென உள்ள பெட்டி களில் வைத்து, சீலிட்டு எடுத்து செல்ல வேண்டும். மரப் பெட்டிகளில் எடுத்து செல்ல முடியாது; அவ்வாறு செய்வது, ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய செயல்.
* வங்கிக்குச் சொந்தமான பணத்தை எடுத்துச்செல்லும்போது வழியில் ஏதாவது இடர்பாடுகள் நேரிட்டால், வங்கி அதிகாரிகள் விரைந்து சென்று பணத்தை மீட்க வேண்டும். காப்பீட்டுக்குரிய இன்சூரன்ஸ் நிறுவனத்துக் கும் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இவை உள்பட இன்னும் எண்ணற்ற விதி முறைகள் உள்ளன. எனினும், வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால் விதிமீறல்கள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

திராட்சைப் பெட்டியா, பணப் பெட்டியா?:
கோவையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு, 570 கோடி ரூபாய் ரொக்கம் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டதில், எண்ணற்ற விதிமீறல்கள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
*பணம் வைக்கப்பட்டிருந்த மரப்பலகை பெட்டிகள் பலவீனமாக இருந்தன.பார்ப்பதற்கு, திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களை பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படும் முறையை கொண்டிருந்தன.
*உள்ளே 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளில் எவ்வகையான நோட்டுகள் வைக்கப்பட்டுள்ள என்ற பண மதிப்பு குறித்த விவரங்கள் பெட்டிகளின் மீது இல்லை.
*வங்கிக்கான பிரத்யேக நிற குறியீடுகள் பெட்டிகளில் பதிவிடப்படவில்லை; பாதுகாப்பு முறைகளும் பின்பற்றப்பட வில்லை. *லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கத்துக்கு, இன்சூரன்ஸ் ஏதும் செய்யப்படவில்லை.*அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் பயணிக்கவில்லை என்பது உள்ளிட்ட எண்ணற்ற விதிமீறல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
*இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நட வடிக்கை பாயுமா என்ற கேள்விகளுக்கும் இதுவரை விடையில்லை.வங்கி அதிகாரி களி டம் விளக்கம் கேட்டால், 'எதுவும் எங்களால் கூற முடியாது' என, கைவிரிக்கின்றனர்.
dinamalar.com

கருத்துகள் இல்லை: