சனி, 21 மே, 2016

வாசன், ராமகிருஷன், விஜயகாந்த். வைகோ , திருமாவளவன். முத்தரசன் சந்தித்தனர் ... வைகோவின் தலைப்பாகையை காணல்ல

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. இணைந்து அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மேலும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர்.  வைகோவின் பச்சை தலைப்பாகையை விஜயகாந்த் உருவிட்டாரோ? அம்மாவின் புதன் கிரக தோஷத்துக்கு கட்டியது. வாங்கிய காசுக்குதான்  வேலைபாத்தாச்சே...  தெனாவட்ட பாருங்க.. இத்தனையும் பண்ணிபுட்டு போஸ் வேற..     
ஆனால், தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள்கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: