பல அணிகள்.. சிதறும் வாக்குகள்.. அதிருப்தி நிலவினாலும் அதை வெளிப்படுத்தாத அமைதி மனநிலை என கடுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது 2016 சட்டமன்றத் தேர்தல் களம்.மக்களின் ஆதரவு யாருக்கு என்பதைக் கண்டறிவது சவாலாக இருந்த நிலையில், நக்கீரன் சர்வே படை களமிறங்கியது. ஒரு தொகுதிக்கு 200 வாக்காளர்கள் என 234 தொகுதிகளிலுமாக 46ஆயிரத்து 800 பேரை சந்தித்தோம். இவர்களில் சரிபாதி பெண்கள்.<புதிய-இளம் வாக்காளர்களான 18 வயது முதல் 25 வயது உடையவர்களை ஒரு தொகுதிக்கு 40 பேர் என சந்தித்தோம். இவர்களிலும் சரிபாதி பேர் பெண்கள். இதுபோல ஆண்-பெண் விகிதம் சரிசமமான அளவில் 26 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் தொகுதிக்கு 140 பேர். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 20 பேர் என்ற அளவில் நக்கீரன் சர்வே படை தனது கருத்துக் கணிப்பை மேற்கொண்டது.விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் எனப் பல தரப்பட்ட மக்களும் இதில் அடங்குவர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் உட்பட்ட நகரங்களை, ஒன்றியங்களை கவனத்தில்கொண்டதுடன், அந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மையான சமூகம், வெற்றி-தோல்விகளைத் தீர்மானிக்கும் சமூகம், வேட்பாளர்களின் பலம்-பலவீனம், அரசியல் கட்சிகளின் வாக்குவங்கி, அனைத்துக் கட்சிகளின் பிரச்சார அணுகுமுறை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன."
நக்கீரன் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. கட்சிக்காரர்களிடம் கருத்து கேட்கவில்லை. பேருந்துநிலையம்- சந்தை-தேநீர்க்கடை போன்ற மக்கள் கூடும் இடங்களைத் தவிர்த்து, தனித்தனி நபராகவே சந்தித்தோம். பெண் வாக்காளர்களைப் பெரும்பாலும் வீடுகளுக்கு சென்று நேரில் சந்தித்து கருத்து கேட்டு இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த சட்டமன்றத் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானதாக இருப்பதால் அந்தச் சூழல் சிறிதும் குறையாமல் அப்ப டியே உள்ளது உள்ளபடி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றா வது அணி நிறைய வாக்கு களைப் பிரிக்கும் என எதிர் பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல் களத்தில் சில தொகுதிகளில் அதன் தாக்கம் உள்ளது. சில தொகுதிகளில் தாக்கம் இல்லை.
திருவெறும்பூர் தொகுதியில் 16 சதவிகித வாக்குகளைப் பெறும் தே.மு.தி.க. அங்கே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சம பலத்தில் மோத விட்டிருக்கிறது.
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ.க. அதிக வாக்குகளைப் பிரித்து, தேர்தல் முடிவுகளையே மாற்றுகிறது. அதே மாவட்ட குளச்சல் தொகுதியில் ம.தி.மு.க. அதிக வாக்கு களைப் பெற்று தொகுதி முடிவை இழுபறி ஆக்குகிறது.
கொங்கு மண்டலத்தில் போட்டியிடும் கொங்கு கட்சிகள் ராசிபுரம், நாமக்கல், குமார பாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, அந்தியூர் ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகள் பெற்று முடிவை மாற்றியமைக்கின்றன.
மழை வெள்ளம் பாதிக்காத சேலம் மாவட்ட பகுதிகளில் தொடங்கும் அ.தி.மு.க. வாக்குபலம் கோவை, திருப்பூர் என தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. அதுபோல தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. வலுவாக உள்ளது. மேற்கு மாவட்டங்கள் மற்றும் தேனி மண்டலங்களில் பின்வாங்கும் தி.மு.க., காவிரி டெல்டாவான தஞ்சை மண்டலத்தில் அ.தி. மு.க.வுடனும் இடதுசாரி கட்சிகளுடனும் வலுவாக மோதுகிறது. வட மாவட் டங்களில் அ.தி.மு.க.வையும் பா.ம.க.வையும் சரி சமமாக சந்தித்து தி.மு.க. இயல்பாகவே முன்னிலை பெறுகிறது.
;தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளோடும் சரிசமமாக மோதி, முன்னிலை பெறும் தி.மு.க.வின் ஓட்டம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்கிற மக்களின் மனநிலையைத் தெளிவாகவே பிரதிபலிக்கிறது.
;ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க.வின் குரு, தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரசையும் மக்கள்நலக் கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க.வையும் பின்தள்ளிவிட்டு முன்னிலை பெறுகிறார். தர்மபுரி தொகுதியில் பா.ம.க., அ.தி.மு.க.வை பின்தள்ளி இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. பென்னாகரம், சேலம் மேற்கு, மேட்டூர், ஓமலூர், ஆற்காடு ஆகிய தொகுதிகளில் கணிசமான செல்வாக்குடன் பா.ம.க. இருப்பதால் முடிவுகளில் மாற்றம் தெரிகிறது
தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காட்டுமன்னார்கோயில், ஊத்தங்கரை, அரூர், கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் தனி செல்வாக்குடன் திகழ்கிறது
உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் மற்ற கட்சிகளை விட முன் னிலை பெறுவதோடு, விழுப்புரம், ரிஷிவந்தியம், சூலூர், பெரம்பலூர், அரியலூர், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. கணிசமான ஆதரவைப் பெறுகிறது
;திருப்போரூர், செஞ்சி, மதுரை தெற்கு, அரவக்குறிச்சி, கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, பல்லடம், பாளையங் கோட்டை, குளச்சல், சங்கரன்கோயில் தொகுதி களில் ம.தி.மு.க. தனது பலத்தை வெளிக்காட்டு கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கள், கலைஞர் போட்டி யிடும் திருவாரூர், விக்கிர வாண்டி, வாசுதேவநல்லூர், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, திண்டுக்கல், வால் பாறை, நன்னிலம், விளவங்கோடு, பவானிசாகர், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் வாக்கு வங்கியுடன் உள்ளன. நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் வாக்குபலம் பெறாவிட்டாலும் தமிழகம் முழுவதும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த் திருக்கிறது.
;சாதி, மத கண்ணோட்டங்கள் பல தொகுதி களில் கட்சி அரசியலைத் தாண்டி முன் நிற்கின்றன. புதிய வாக்காளர்களில் ஒரு தரப்பினர் தி.மு.க.வை ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இல்லை. பெண்களிடம் அ.தி.மு.க. அதிக செல்வாக்குடன் திகழ்கிறது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள செல் போன், ஸ்கூட்டி மானி யம் இவர் களைக் கவர் கிறது. தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை இளைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரையும் நடுத்தர வர்க்கத்தினரையும் கவர்கிறது. ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான கோபம் பல தொகுதிகளில் வெளிப் பட்டாலும் கட்சி வாக்கு கள் சிதறவில்லை. இழுபறி தொகுதிகளிலும் முதலிரண்டு கட்சிகளுக்கு 2% வித்தியாசம் மட்டுமே உள்ள தொகுதிகளிலும், கடைசி நேரப் பணிகளைப் பொறுத்து முடிவுகள் மாறலாம்.;
;வேட்பாளர்களின் தேர்வு, சாதி ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறும் இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் பண விநியோகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்கள் மத்தியில் "அ.தி.மு.க. ஓட்டுக்குப் பணம் கொடுக்கப் போகிறது' என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதைக் களத்தில் காண முடிந்தது. பண விநியோகம் பரவலாக நடைபெற்றால், கருத்துக் கணிப்பில் வெளிப்படும் முடிவுகள் மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பணப் பாய்ச்சலுக்கு முன்பாக நக்கீரன் சர்வே படை மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி முன்நிலை நிலவரம்.<>-ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக