தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் போட்டியிடும் தொகுதியான உளுந்தூர்பேட்டையில் பேசாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அவரது கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலுக்கு முன்பு வரை நன்றாக பேசி வந்த விஜயகாந்த் தற்போது மிகவும் மோசமாக சொதப்பி வருகிறார். தொண்டர்களிடம் கோபப்படுவது, ஒருமையில் திட்டுவது, சொம்பைகளா, வெளிய போங்கட, அடிச்சி தூக்கி எறியுங்க அவன போன்ற வார்த்தைகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையிலும் இது போன்று பேசினால் அது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் கட்சியினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை பிரச்சாரத்தின் போது பேசுவதை தவிர்த்து விட்டு வாக்காளர்களுக்கு வணக்கம் மட்டும் செய்தால் போதும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜயகாந்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக பேசப்படுகிறது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக