புதன், 27 ஏப்ரல், 2016

வசுந்தரா காசியப் : சினிமாவில் வெற்றி பெற கடின உழைப்பு, திறமை, அதிர்ஷ்டம் எல்லாமே வேண்டும்

வட்டாரம்’ படத்தில் அறிமுகமாகி ‘பேராண்மை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘போராளி’ போன்ற படங்களின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றவர் வசுந்தரா காஷ்யப். தற்போது ‘மைக்கேல் ஆகிய நான்’, ‘புத்தன் இயேசு காந்தி’ படங்களில் நடித்து வருகிறார். இது பற்றி கேட்ட போது... “மைக்கேல் ஆகிய நான் ஒரு ஹாரர் படம். ‘புத்தன் இயேசு காந்தி’ சற்றே மாறுபட்ட படம். இதில் எது முதலில் வந்தாலும் அது என் பத்தாவது படமாக இருக்கும். இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். சினிமாவில் வெற்றி பெற திறமை வேண்டும். அதிர்ஷ்டமும் வேண்டும். கடின உழைப்பும் தேவை. திறமை இருந்தால் மட்டும் போதாது. அது போலவே கடின உழைப்புடன் திறமை, அதிர்ஷ்டம் எல்லாமும் அமைய வேண்டும். ‘காக்கா முட்டை’ படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு எளிமையாக இவ்வளவு பெரிய விஷயத்தை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். ‘இறுதிச்சுற்று’ பார்த்தேன் அதுவும் பிடித்திருந்தது. அதில் நடித்த ரித்திகாசிங்கிற்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டேன். அவர் திறமைசாலி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட! இப்படிப்பட்ட பெருமை எல்லோருக்கும் வராது.


சமுத்திரக்கனி சார் இயக்கத்தில் ‘போராளி’யில் நடித்தேன். அந்தக் கேரக்டரில் என்னால் நடிக்க முடியுமா என்று பயந்தேன். அவர் கொடுத்த ஊக்கத்தாலும் தைரியத்தாலும்தான் நடித்தேன். அவருக்கு தேசிய விருது என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்து சொன்னேன்.

எனக்கு மீடியாவில் ஆர்வம் அதிகம். ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன். நான் ஆங்கில இலக்கியம் படித்ததே அதற்காகத்தான். இப்போது நான் நடித்துள்ள ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் கூட பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன்” என்றார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: