தமிழக பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில், குத்தாட்டம் ஏற்பாடு செய்தும், கூட்டம் கூடவில்லை.
பா.ஜ., தேர்தல் அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜனை
ஆதரித்து, நிதின் கட்கரி பிரசாரம் செய்தார்.
அவரது வருகையை முன்னிட்டு, தமிழக போலீசார் மற்றும் மத்திய போலீஸ் படை வீரர்கள் என, ஏராளமானோர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆடம்பரமில்லாத பிரசார மேடையில், 'மாபெரும் பிரசார கூட்டம்' என்ற வாசகம் மட்டுமே பிரம்மாண்டமாக இருந்தது.
கூட்டத்தை கூட்ட, சினிமா பாடலை ஒலிக்க விட்டு, அதற்கு திரைப்பட கலைஞர்களும் குத்தாட்டம் போட்டனர். 'டங்கா மாரி...' முதல், 'தெறி' வரை சினிமா பாடலை தெறிக்க விட்டும், கூடியவர்களின் எண்ணிக்கை, 500ஐ தாண்டவில்லை. - நமது நிருபர் - தினமலர்.com>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக