ரிசர்வ் வங்கிக்கு இணையான பணபரிமாற்ற வழக்கில் திடுக்கிடும் திருப்பங்கள்
ரெய்டில் சிக்கியுள்ள அமைச்சருக்கு ஹாங்காங் அருகில் சொந்த தீவு இருப்பதும், அங்கு அடிக்கடி நடிகைகளுடன் உல்லாச பயணம் சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்த அனைத்து ரகசியங்களும் அன்புநாதனுக்கு தெரியும் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த அய்யம்பாளையத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர் அன்புநாதனின் குடோன் மற்றும் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இவை வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட இருப்பதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கரூர் எஸ்பி வந்திதா பாண்டே மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர். இதில், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தை கட்டுகளாக கட்டி வைக்கும் ரப்பர் பேண்ட்கள், ஆம்புலன்ஸ் மற்றும் ரொக்கம் ரூ.10 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இரவு 7.40 மணியளவில் வருமான வரித்துறை இணை இயக்குநர் (தேர்தல்) மணிகண்டன், கரூர் வருமான வரித்துறை அலுவலர்கள் நடராஜன், ராஜசேகர், வருமான வரித்துறை ஆய்வாளர்கள் சவுந்தர்ராஜன், மீனாட்சி உட்பட வருமான வரித்துறை அதிகாரிகள், அய்யம்பாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி செல்லும் வழியில் அன்புநாதன் தற்போது குடியிருந்து வரும் புதிய வீட்டுக்கு சென்றனர்.
அன்புநாதனை அழைத்துக் கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரம் கழித்து 10.30 மணிக்கு வெளியே வந்த அனைவரும், திரும்பவும், புதிய வீட்டின் எதிரேயுள்ள மற்றொரு பழைய வீட்டுக்குள் புகுந்து சோதனையிட ஆரம்பித்தனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.5 கோடி பணம் சிக்கியது. மேலும், ரூ.2 கோடி மதிப்புள்ள கொலுசுகள், ரூ.2 கோடி மதிப்புள்ள சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பறிமுதல் இதுதான் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அன்புநாதன் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
அன்புநாதன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆனால் கரூரில் வசித்து வருகிறார். ஆரம்பகாலத்தில் அரசியல்வாதிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சிறு சிறு வேலைகளை முடித்துக் கொடுத்து வந்தவர், பின்னர் திடீர் வளர்ச்சி அடைந்தார். பின், பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். செந்தில் பாலாஜியின் வலதுகரமாக திகழ்ந்ததால், அவர் மூலமாக மற்ற அமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு அன்புநாதனுக்கு ஏற்பட்டது.
செந்தில்பாலாஜி காலி
மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம், அன்புநாதனுக்கு அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அன்புநாதனின் நெருங்கிய நண்பரான செந்தில்பாலாஜிக்கும், ஓபிஎஸ் அணிக்கும் ஆகாது என்பதால் செந்தில்பாலாஜியை அன்புநாதன் கழற்றி விட்டார். இதனால், இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. எனினும், ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் செல்வாக்கினால் அன்புநாதன் பவுர்புல் ஆனார். அதன்பின்னர்தான் குடோன் அமைத்து பண பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு அவர் வளர்ச்சியடைந்தார். செந்தில்பாலாஜியின் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்புக்கு அன்புநாதன்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
ஆடி காரில் குடோனுக்கு வந்த அமைச்சர்கள்
வருமான வரித்துறையினரால் ரெய்டு செய்யப்பட்டு ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள கரூர் வீட்டில் உள்ள குடோனுக்கு, ஊர் பெயரை தனது பெயருடன் கொண்டுள்ள அமைச்சரும், மூன்று ஆங்கில எழுத்தை இன்ஷியல் வைத்து அழைக்கப்படும் ஐவர் அணியில் இருந்து ஜெயலலிதாவின் விசாரணை வளையத்துக்குள் வந்த மூத்த அமைச்சர் ஒருவரும், ஜெயலலிதா பேரவையில் மாவட்ட பொறுப்பாளராக உள்ள அவரது மகனும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதில், அன்புநாதனிடம் இன்ஷியல் அமைச்சரின் மகன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த இரண்டு அமைச்சர்களும் தங்களது லஞ்ச, ஊழல் பணங்களை அன்புநாதன் மூலமாக பல இடங்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. மேலும், ஐவர் அணியில் இருந்து தற்போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கும் அமைச்சரும் இங்கு அடிக்கடி வந்து செல்வார். அவரது பெரும்பாலான பணமும் அன்புநாதன் மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம்.
அன்புநாதனிடம் ‘ஆடி’ உள்பட பல்வேறு வகையான நவீன ரக சொகுசு கார்கள் உள்ளன. கரூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் அமைச்சர்களை தனது கரூர் குடோனுக்கு அழைத்து வர இந்த கார்களை அன்புநாதன் அனுப்புவார். அமைச்சர்களும் அவர்களது காரில் வராமல் அன்புநாதனின் காரில் கரூர் வீட்டு குடோனுக்கு வருவார்கள். பின்னர், அங்குள்ள ஏசி அறையில் அமர்ந்து பணத்தை எப்படி பட்டுவாடா செய்வது, எங்கெல்லாம் பணம் அனுப்ப வேண்டும், எதில் அனுப்ப வேண்டும் என்பது குறித்து விலாவாரியாக முடிவு செய்வார்கள்.
நடிகைகளுடன் டிஸ்கஸ்
அன்புநாதனிடம் பணம் அதிகமாக குவிந்ததால் சினிமா துறையினருக்கு பணம் பைனான்ஸ் செய்து வந்தார். அவர் பைனான்ஸ் பேசும்போதே லட்சங்களை விட்டுவிட்டு கோடிகளில்தான் பேச ஆரம்பிப்பார். இதனால், சினிமா வட்டாரத்தில் நடிகர், நடிகைகளுடன் அன்புநாதனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சென்னை மத்திய பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அன்புநாதனுக்கு நிரந்தர சூட் அறை உள்ளது. இந்த அறைக்கு சினிமா நடிகைகளை விவாதத்திற்கு என அழைக்கும் அவர் அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். பின்னர், அவர்களில் சிலரை தேர்வு செய்து அவர்களை அமைச்சர்களுக்கு சப்ளை செய்து வந்தார். அமைச்சர்களும் யார் என்பது தெரியாமல் தங்களது அடையாளத்தை மறைத்து சாதாரண உடையில் ஓட்டலுக்கு வந்து நடிகைகளை அனுபவித்து சென்றுள்ளனர்.
ஓட்டலில் 2 நாள் கும்மாளம்
கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, அந்த ஓட்டல் அறைக்கு வந்த ஊர் பெயரை முதலில் கொண்ட மூத்த அமைச்சர், அன்புநாதன் தேர்வு செய்து அனுப்பிய லட்சுமிகரமான கவர்ச்சி நடிகை மற்றும் பின்னணியும் பாடும் மற்றொரு நடிகையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், அதேநாளில் தன் அறையில் 2 நடிகைகள் இருப்பதை மற்றொரு மூத்த அமைச்சருக்கு போன் செய்து சொல்லியுள்ளார். அந்த அமைச்சர் தலைமை செயலகத்திற்கு கூட செல்லாமல் 2 நாட்கள் ஓட்டலில் தங்கியிருந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
ஹாங்காங்க் தீவும் அமைச்சர்களும்
நட்சத்திர ஓட்டலில் அந்த இரண்டு நடிகைகளின் கலை சேவையும் ஊர் பெயரை கொண்ட அமைச்சருக்கு பிடித்துவிட அவர்கள் இருவரையும் வெளிநாட்டில் உள்ள ஒரு தீவுக்கு உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். அப்போது நடிகைகள் உள்நாடு என்றால் பரவாயில்லை, வெளிநாடு என்றால் ரேட் அதிகமாகும் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பலமாக சிரித்த அவர், நான் யார் என்று உங்கள் இருவருக்கும் தெரியுமா என்று கேட்டுள்ளார். நடிகைகளுக்கு அவர் யார் என்று தெரியாததால், தான் யார் என்பதையும், தனக்குள்ள செல்வாக்கையும் கூறி, நான் நினைத்தால் உங்களை ஓசியிலேயே அழைத்து செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
இதனால், பயந்துபோன நடிகைகள் நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் நாங்கள் வருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால், அமைச்சரோ உங்கள் ரேட்டை கூறுங்கள் நான் தந்து அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி, நடிகைகள் இருவரையும் ஹாங்காங்க் பக்கத்தில் அவருக்கு சொந்தமான தீவிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
ஊரை தன் பெயருக்கு முன்னாள் வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங்க் அருகே தங்கியிருந்த தீவு அவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அதை கேட்ட நடிகைகள் மயக்கம் போட்டு விழாத குறையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் மதிப்பு பல நூறு கோடி என்பது அதிர்ச்சியான விஷயம். ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு 1 மாதம் முன்பு உள்ள காலகட்டத்தில் ஊர் பெயரை முன்னால் வைத்துள்ள அமைச்சரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டாலே அவர் அடிக்கடி ஹாங்காங்க் சென்றுள்ளது தெரியவரும். இந்த தீவு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வங்கியதாக கூறப்படுகிறது.
மூன்று எழுத்தும்.. மும்பை முதலீடும்
மூன்று ஆங்கில எழுத்துகளை தன் இன்சியல் பெயராக கொண்டுள்ள அமைச்சருக்கு அன்புநாதன் மும்பையை சேர்ந்த பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து கொடுத்துள்ளார்.
தேர்தலுக்கு பணம் பட்டுவாடா
கரூரில் உள்ள இந்த குடோன் தமிழகத்தின் சென்டர் பாயின்டாக இருந்துள்ளது. இங்கிருந்துதான் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு பணம் முழு அளவில் ஆம்புலன்ஸ் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இங்கிருந்துதான் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியுள்ளது.
அமைச்சர்கள் கைது?
கரூர் பகுதியில் மட்டும், கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் இங்கிருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த குடோனில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு நிகரான பணபரிமாற்றம் நடந்துள்ளதை பார்த்து வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா கைப்பற்றப்படும் நிலையில், தமிழகத்தின் முக்கிய மூத்த அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
வழக்கை காலி செய்ய அதிகாரிகள் முயற்சி
அதிமுக அரசு மற்றும் மூத்த அமைச்சர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றவும், வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்யவும் தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வர் அலுவலக செயலாளர் ராமலிங்கம், வெங்கட்ரமணன், தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் ஏடிஜிபி திரிபாதி மற்றும் சில உயர் அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. தினகரன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக