செவ்வாய், 26 ஏப்ரல், 2016

வைகோவால் வரிசையாக வீழ்த்தப்பட்ட அவரது நண்பர்கள்....

edit apr 26முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு வைகோவே உதாரணமாகி நிற்கிறார். 1989 பொதுத் தேர்தல் நேரம். தி.மு.க.வில் இவரின் நிழலாக இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அன்றைய நாளில் தூத்துக்குடி நெல்லை, கன்னியாகுமரி வரை வைகோ சொல்வதுதான் திமுக-வில் நடக்கும். கலைரும்கூட வைகோ சொல்வதையே கேட்பார். அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ராதாகிருஷ்ணனுக்கு வைகோ ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவர் மந்திரியாகி இருப்பார். ஆனால்அன்று ராதாகிருஷ்ணனை நம்ப வைத்து கழுத்தறுத்ததார் வைகோ. அவரது ஆதரவாளர்களிடம் அழுத்தம் கொடுத்திருந்தாலே ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருப்பார். உள்ளடி வேலை செய்தார் வைகோ என்பது அன்று களத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்குத் தெரியும்.

அடுத்து ஒரு வாய்ப்பு 1996ல்வாய்த்தது. அப்போது வைகோ வை நம்பி அவருடன் வந்திருந்த ராதாகிருஷ்ணன், மதிமுக- சி.பி.எம் கூட்டணியில் கோவில்பட்டியில் போட்டியிட்டார். மதிமுக நபர்களிலேயே இவர்தான் 34 ஆயிரம், அதிக வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்து வைகோ 28 ஆயிரம் ஓட்டு இரண்டாவது இடம். வைகோ கொஞ்சம் உழைத்து ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அப்போது ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருக்கலாம். அப்போதும் நம்ப வைத்து கழுத்தறுத்தார்.
இன்று அதே கோவில்பட்டி தொகுதியில் வைகோ ஆதரவற்று நடுத்தெருவில் நிற்கிறார். தான் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதை உறுதி செய்துகொண்டு, போட்டியிடப் போவதில்லை, தொண்டாற்றப் போகிறேன் என்கிறார். இத்தனை காலம் டீ ஆற்றிக் கொண்டிருந்தாரா என யாரும் கேட்க மாட்டார்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளைந்திருக்கிறது. அவ்வளவே. இது அவர் விதைத்தது. அவரே அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.கண்ணப்பன், திருச்சி செல்வராஜ், பொன்.முத்துராமலிங்கம்,செஞ்சி ராமச்சந்திரன், மீனாட்சி சுந்தரம், கே.சி.பழனிசாமி, மதுராந்தகம் ஆறுமுகம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தங்கவேலு உள்ளிட்ட அன்றைய திமுக ஜாம்பாவான்கள் எல்லாம் வைகோவை நம்பி சென்று நடுத்தெருவில் நின்றார்கள். ஒவ்வொருவரையும் கழுத்தறுத்து வெளியேற்றினார். அல்லது வெளியேற வைத்தார்.துரோகங்களையே விதைத்துவிட்டு துரோகத்தையே அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.

இவர்  இன்று  தன்னைநம்பி வந்ததிருமாவளவன் , ஜி.ராமக்கிருஷ்ணன், முத்தரசன், விஜயகாந்த் என்று வந்து நிற்கிறது. இவரை நம்பி  இப்போ அந்தரத்தில்  நிற்கிறார்கள் இந்த   மக்கள் நல கூட்டணி தலைவர்கள்.

இன்று தன் கிளைகளை தானே வெட்டிக்கொண்டு பட்டுப்போய் நிற்கிறார். வேறு என்ன சொல்வது.aanthaireporter.com
பா. ஏகலைவன்  

கருத்துகள் இல்லை: