சனி, 30 ஏப்ரல், 2016

வைகோவை நம்பி வந்த விஜயகாந்த்...தேரை இழுத்து வந்து தெருவீதியில் விட்ட வைகோ?

விஜயகாந்த் ஆலோசனை புறக்கணிப்பு வைகோ மீது தே.மு.தி.க.,வினர் கடுப்பு விஜயகாந்த் ஆலோசனையை ஏற்று, தேர்தலில் போட்டியிடும் முடிவை, வைகோ எடுக்காதது, தே.மு.தி.க.,வினர் மத்தி யில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நல கூட்டணி யில், தே.மு.தி.க., இடம்பெற மூல காரணம், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ. இதனால், தி.மு.க., கூட்டணியை விரும்பிய அக்கட்சியினர், வைகோ மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர். சாத்துார் தொகுதி: இந்நிலையில், கோவில் பட்டி தொகுதியில் போட்டியிடாமல் கடைசி நேரத்தில் வைகோ ஒதுங்கினார். வைகோவின் இந்த முடிவால், கூட்டணி யின் செல்வாக்கு சரியும் என விஜயகாந்த் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கருதினர்.  சு.சாமியின் சொல்கேட்டு(பிரேமலதா) ஒரு அரசியல் ஜெயலலிதாவின் சொல்கேட்டு (வைகோ)ஒரு அரசியல்..நாட்டு மக்களின் சொல் மட்டும் கேட்கவே மாட்டாங்க


இதையடுத்து, வைகோவை தொடர்பு கொண்டு, சாத்துார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என விஜய காந்த் ரகசிய கோரிக்கை வைத்தார். வைகோ நிச்சயம் அதை ஏற்பார் எனக் கருதி, அவரது தேர்தல் புறக்கணிப்புமுடிவு குறித்து, விஜயகாந்த், எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.

ஆனால் கடைசி வரை,தனது முடிவை வைகோ மாற்றிக் கொள்ளவில்லை. விஜயகாந்த் மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்குமாறும் வைகோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடும் அதிருப்தி: விஜயகாந்தின் நிர்பந்தத்தை தவிர்ப்பதற்காகவே, இந்த நிகழ்விலும் வைகோ பங்கேற்கவில்லை. தற்போது மனு தாக்கலும் நிறைவு பெற்றுள்ளது. விஜயகாந்தின் ஆலோசனையை, வைகோ புறக்கணித்துள்ளது, தே.மு.தி.க., நிர்வாகிகள் மத்தியில், கடும்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதனால், தேர்தல் பிரசாரத்திற்கு, வைகோவை அழைக்க வேண்டாம் என்ற முடிவில், அக்கட்சி வேட்பாளர்களும், நிர்வாகி களும் உள்ளனர்.

9 நாள் பிரேமலதா பிரசாரம்: இதற்கு முன் விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் விஜயகாந்த் போட்டியிட்டபோது, அவரது பிரசாரம் வெகுவாக கை கொடுத்தது. ஆனால், தற்போது அவரது பிரசாரத்திற்கு மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பில்லை.

தொகுதியில் இருந்து வரும் தகவல்கள், தே.மு.தி.க., தலைமைக்கு கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வரும், 5ம் தேதி, தனது மூன்றாம் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டு, உளுந்துார்பேட்டை தொகுதியில், ஒன்பது நாட்கள் முகாமிட, பிரேமலதா முடிவு செய்துள்ளார்.--

நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை: