சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தியும்,
திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப்
பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. சோனியா
காந்தி உரையாற்றவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ்
மற்றும் திமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் தேர்தல்
பிரசாரத்தில் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி
அமைத்து போட்டியிடுகின்றன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது.கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மே 5ம் தேதி சென்னை வர உள்ளார்.
அன்று மாலை சென்னையில் தீவு திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.
தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசுகிறார்.
சோனியா - கருணாநிதி பேச இருக்கும் தீவு திடலை தி.மு.க. முன்னாள்
எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா
ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் வேட்பாளர்கள் சேகர்பாபு, ராயபுரம் மனோ,
கராத்தே தியாகராஜனும் உடன் சென்றனர்.
ஒரு லட்சம் பேர் பங்கேற்பு
பொதுக்கூட்டம் பற்றி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, 1 லட்சம் பேர்
கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும்
மேடையில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மே 5ம் தேதி
புதுச்சேரி பிரசாரம் செய்யும் சோனியா காந்தி, மாலையில் சென்னையில்
நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறா
ஸ்டாலின் - ராகுல்காந்தி
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம்
செய்கிறார். அவர் சாலை வழியாக சென்று ஆதரவு திரட்டுகிறாரா அல்லது
பொதுக்கூட்டங்களில் மட்டும் கலந்து கொள்வாரா என்பது பற்றி முடிவு
செய்யவில்லை. ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் திமுக பொருளாளர்
மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது.
Read more at:://tamil.oneindia.com
Read more at:://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக