பாலியல் குற்றங்களில்
தண்டிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவுப்பட்டியலாக
வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக இந்திய அரசு
தெரிவித்துள்ளது
தேசிய அளவிலான இந்த பதிவுப்பட்டியல் ஆவணத்தில்
பாலியல் வல்லுறவு, பலாத்காரம், மறைந்திருந்து பார்ப்பது, பின்னால் சென்று
தொல்லை கொடுப்பது உள்ளிட்ட எல்லாவிதமான பாலியல் குற்றங்களுக்காக
தண்டிக்கப்பட்டவர்களின் புகைப்படம், பெயர், முகவரி அனைத்தும் இடம்பெறும்.
இந்த குற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்ட பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களின் விவரங்களும் கூட இதில் இடம்பெறும்.
இதற்கான செயற்திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத்தலைநகர் டில்லியில் ஒரு மாணவி கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது இந்த யோசனை முதலில் முன்வைக்கப்பட்டது.
அந்த பாலியல் கொலைச்சம்பவம் இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தேசிய அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பைத் தோற்றுவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக