பாட்னா : கடுமையான கோடை வெப்பம் காரணமாக பீகாரில் ஏற்பட்டு வரும் தீ
விபத்துக்களை தடுக்க காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமையல், பூஜை போன்ற
தீயை பயன்படுத்தும் செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டாம் என பீகார் அரசு பொது
மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.பீகாரில் வெயிலால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக
பாட்னா, நாலந்தா, போஜ்பூர், ரோக்தாஸ், புக்ஷர், பாபுயா போன்ற பல்வேறு
இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக காலை 9
மணி முதல் 6 மணி வரை சமையல், பூஜை போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என மக்களை
அறிவுறுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
உத்தரவிட்டுள்ளார். சமையல், பூஜை போன்றவற்றை காலை 9 மணிக்கு முன்னரே
முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பழைய மின்சார வயர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் மின்துறை செயலாளருக்கு நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தும், தீ விபத்துக்களை தடுக்க தீயை பயன்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தீயை கட்டுப்படுத்த தேவையான கருவிகளையும் உடனடியாக வாங்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ள நிதிஷ்குமார், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர், தலைமை செயலர், போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து அவசர கூட்டம் நடத்தி ஆலோசித்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க டேங்கர்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யவும் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக