கேரள மாநிலத்தில் மே 16-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில்
காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி
ஏற்பட்டுள்ளது. கொல்லம் அருகே உள்ள சவரா தொகுதியில் போட்டியிடும் அனைத்து
வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒரு தொலைக்காட்சி சேனல் ஏற்பாடு
செய்தது. இதில் காங்கிரஸ் கூட்டணியின் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி
வேட்பாளரும், கேரள தொழிலாளர் துறை மந்திரியுமான சிபு பாபுஜான், இடதுசாரி
வேட்பாளர் விஜயன் பிள்ளை உள்பட சிலர் கலந்து கொண்டனர்.
அப்போது
குடிநீர் பற்றாக்குறை பற்றி விவாதம் நடந்தபோது, அதற்கு மந்திரி சிபு
பாபுஜான் அளித்த பதிலால் ஆத்திரமடைந்த சிலர் கற்களையும், நாற்காலிகளையும்
தூக்கி வீசினார்கள்.
இதில் ஒரு கல் பட்டு சிபு பாபுஜான் கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல விஜயன் பிள்ளை மீது ஒரு நாற்காலி விழுந்ததில் அவரும் காயம் அடைந்தார். இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் இரு கட்சிகளின் தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.dailythanthi.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக