சிக்கிய
அன்புநாதன் சாதாரண ஆள் இல்லை. ஓ.பி., நத்தம், வைத்திலிங்கம், எடப்பாடி,
பழனியப்பன் ஆகிய மந்திரிகளும், ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன்,
ராமலிங்கம், ராமானுஜம், திரிபாதி போன்ற அதிகாரிகளும் சேர்ந்து உருவாக்கிய
நபர். சசிகலாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு கார்டனுக்கு வரும் பணத்தைக்
கொண்டு வந்து சேர்ப்பதிலும், சசிகலாவின் கண்காணிப்பு இல்லாமல் புதிய
திட்டங்களுக்கும் காண்ட்ராக்ட்டுகளுக்கும் ஓ.கே. வாங்கும் அதிகாரம் பெற்ற
இந்த மந்திரிகள், அதிகாரிகள் கும்பல் ஜெ. கைதாகி சிறைக்குப் போனபோது வேகம்
பெற்றது. ;
சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பிறகு ஜெ. தன் உடல்நிலை காரணமாக இந்த மந்திரிகள், அதிகாரி களை நம்பி மட்டுமே செயல்பட வேண்டி வந்தது. கடைசி இரண்டு வருட காலம் இந்தக் கும்பல் புகுந்து விளையாடியது. எதையும் முறையாக கார்டனுக்குச் சேர்க்காமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை எடுத்து அதில், பணக்கட்டுகளை அடுக்கி பாதுகாத்து வந்தது. அந்தச் சமயத்தில்தான் அன்புநாதன் நத்தம்விஸ்வநாதனுக்கு அறிமுகமாகிறார்..இந்தக் கும்பல் அன்புநாதனுக்குக் கொடுத்த முதல் அசைன்மென்ட்டே பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான்.
சசிகலாவுக்கு நெருக்கமான நெட்வொர்க்கின் கண்ணில் படாமல் சென்னையில் சேர்க்கப்படும் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மந்திரிகள் சொல்லும் இடத்தில் வாகனத்தில் கொண்டுபோய் பத்திரமாகச் சேர்த்தார் அன்புநாதன். ""அதெப்படி உன்னால் முடிகிறது?'' என கேட்ட நத்தத்திடம், ""நான் பணத்தை கொண்டு போவது ஆம்புலன்ஸிலும், போலீஸ் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பச் செல்லும் வங்கிகளின் வண்டிகளிலும்தான்'' என்றார் அன்புநாதன்.
"இந்த வண்டிகள் உனக்கு எப்படி கிடைக்கிறது?'' என ஆச்சரியப்பட்ட நத்தத்திடம்... ""எல்லாம் திருட்டு வண்டிங்க சார். தமிழ்நாடு முழுக்க திருடு போற வண்டிகள் எல்லாம் என்கிட்டதான் வரும். கரூரில் உள்ள லாரி பாடி பில்டிங் தொழிற்சாலைகளில் நான் அவற்றின் தோற்றத்தை மாற்றிவிடுவேன்.
போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி எனது நெருங்கிய நண்பர். அவர் மூலம் டூப்ளிகேட் ஆர்.சி. புக் வாங்கிவிடுவேன். இது தான் சார் என் தொழில்'' என்றார் அன்புநாதன்.அன்புநாதனை, நத்தத்திற்கு ரொம்ப பிடித்து விட்டது.
நத்தத்துடனான நெருக்கம் செந்தில் பாலாஜிக்கு பிடிக்கவில்லை. செந்தில்பாலாஜியை நத்தம் மூலமாக காய் நகர்த்தி காலி செய்ய முயற்சி செய்கிறார் அன்புநாதன். இளவரசிக்கு நெருக்க மான செந்தில்பாலாஜியை வீழ்த்துவதற்கு நத்தத் தின் மூலம் நெருக்கமான வைத்தி, ஓ.பி. உள்ளிட்ட ஐவரணியை பயன்படுத்துகிறார் அன்புநாதன்.
ஐவரணி மந்திரிகள் அனைவரும் சம்பாதிக் கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஜெயராமன் என்கிற ஒரு ஆடிட்டர் மூலம் சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனே ஷியா ஆகிய நாடுகளிலும் துபாய் போன்ற அரபு நாடுகளிலும் லிங்க் ஏற்படுத்திக்கொள்கிறார் அன்புநாதன்.
நத்தம் விசுவநாதனின் மகன் அமர், இந்தோனேசியாவில் நிலக்கரிச் சுரங்கம் வாங்கு கிறார். இதையெல்லாம் கேள்விப்பட்ட ஜெ.வுக்கு நெருக்கமான ஷீலா பால கிருஷ்ணன், அன்புநாதனின் நண்பராகிறார்.
வெளி நாட்டிலிருக்கும் அவரது மகனுக்கு ஷீலா, சொத்துக் கள் வாங்க உதவுகிறார் அன்புநாதன். ஷீலா மூலம் காவல்துறையை கவனிக்கும் வெங்கட்ரமணன், ராம லிங்கம் ஆகிய முதல்வரின் செயலாளர்களும், ராமானுஜம், திரிபாதி போன்ற காவல்துறை அதிகாரிகளும் அன்புநாதனின் வளையத்திற்குள் வருகின்றனர்.

அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின் நக்கீரன்,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக