விழுப்புரம்: கடந்த
2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி சிறிய டிவியை கொடுத்து மக்களை
ஏமாற்றிவிட்டார். அதே நேரத்தில் தனது குடும்பத்தினர் வருமானம் பெற வேண்டும்
என்ற நோக்கில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை
மறந்துவிட்டார் என ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என
எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஐந்து
ஆண்டுகளில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 1.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஆமாங்க அவரு சைசுக்குதான் கொடுத்திருக்காரு
இதுதவிர அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3,03,111 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் 3,03,111 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்
தமிழகத்தில் 1.08 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என
கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மினரல் வாட்டர்
வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழகம் முழுவதும்
விரிவுப்படுத்தப்படும்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ள
நிலையில், திமுகவினர் எதுவுமே செய்யவில்லை என பிரசாரம் செய்து வருகின்றனர்.
திமுகவினர் வாக்கு கேட்டு வரும்போது, இத்திட்டங்களை கூறி, அவர்களை விரட்டி
அடியுங்கள்.
திமுக கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய
பல திட்டங்களை நிறைவேற்றவில்லை. திமுக நிறைவேற்றிய ஒரே திட்டம் இலவச வண்ண
தொலைகாட்சி திட்டம்தான்.
அதிலும் திமுக ஏமாற்றிவிட்டது. எல்லாரும் 21 இன்ஞ் டிவி
வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 இன்ஞ் டிவி மட்டுமே
வழங்கப்பட்டது. அதேநேரத்தில் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் என கூறிய
கருணாநிதி அதை நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி
நிறுவனத்தை அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்டு, ரூ. 75 கட்டணத்தில் இணைப்பு
வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் இது 250 ரூபாயாக உயர்த்தப்படும்.
அரசு கேபிள் கட்டணம் குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவுமே
குறிப்பிடவில்லை என்றார். தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக