திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இந்த அழுகையின் இரகசியம் அடிமைத்தனம்! இந்த அழுகையின் வெகுமானம் அமைச்சர் பதவி!

கிளிசரின் வாங்காமலே கூத்துப் பட்டறை பயிற்சி இல்லாமலே கேமரா கோணம் அறியாமலே அழுகிறார்கள்…. ..அழுகிறார்கள்…. எப்படிச் சாத்தியமிது? புரட்சித் தலைவி வரும் பாதையில் கட்டவுட்கள் வைத்தார்கள். அவை காலாவதியாகி பிளக்ஸ் பேனர்கள் வந்தன. பிறகு தொலைக்காட்சி விளம்பரங்கள்… துட்டை இறைத்து/> காக்காய்களை காட்சிப்படுத்தும் இந்த ஜோடனைகளெல்லாம் அம்மாவின் அருளை பெற்றுத் தர போதுமானதா? இது குறித்து அவர்களுக்கு யாரும் பாடம் எடுக்கவில்லை. குனிந்தார்கள், வளைந்தார்கள், தொழுதார்கள், வாய் மூடீனார்கள், ஆயினும்,> ஊழல் திருட்டுக்காக தலைவி சிறை சென்ற போது முதன் முறையாக அவர்கள் அதிகம் பயன்படுத்தியிராத அழுகைக்கு வேலை வந்தது.

கவனியுங்கள் நண்பர்களே,
குறுகிய காலத்தில்
எங்கு அழ வேண்டும்?
எப்பொழுது அழ வேண்டும்?
எத்தனை லிட்டர் அழ வேண்டும்?
அழுதார்கள்,
அழுது காட்டினார்கள்.
சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ
செவாலியர் விருதுக் கலைஞர்களோ
ஒரு போதும்
நிகழ்த்த முடியாத அழுகை இது.

இந்த அழுகையின்
இரகசியம் அடிமைத்தனம்!
இந்த அழுகையின்
வெகுமானம் அமைச்சர் பதவி!
இந்த அழுகையின்
காப்புரிமை புரட்சித் தலைவி!
ழகின் உயிர்ப்பு கண் என்றால்
உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்…
கண்ணீர் எனப்படுவது
இரண்டு வகைப்படும்.
செந்நீரை பறிகொடுத்தும்
கண்ணீரை பரிதவித்தும்
சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு
காலந்தோறும் உடனோடும் ஜீவநதி
கண்ணீர்…
வேடிக்கை பார்ப்போர்
அழுதாலொழிய
வேஷம் கட்டியோருக்கு
வயிறு நிரம்பாது!
அந்தக் கூத்தாடிகள்
பிதுக்கும் கண்ணீர்
ஒரு நடிப்புக் கலை!
சினிமாவில்
கண்ணீர் அருவியை
திறக்கும்
மந்திரப் பொருள்
கிளிசரின்.
பிகினி காலத்து
மாடல் பொம்மைகளுக்கு
கிளிசரின்கள்
டன் கணக்கில் தேவைப்படும்.
கிளிசிரினுக்கு
செலவு வைக்காமல்
கண்ணை குழாயென
திறந்து விடும்
பீம்சிங் காலத்து
கதை மாந்தர்களும்
ஒரு காலத்தில் இருந்தார்கள்.
ஆனால் நண்பா,
சோகத்தோடு சங்கிலி போட்ட
உழைக்கும் மக்களின் கண்ணீரோ
வேடத்திற்காக மை போட்ட
நடிகர்களின் மேக்கப் கண்ணீரோ
மட்டும் கண்ணீர் அல்ல! வினவு.com 

கருத்துகள் இல்லை: