திங்கள், 3 ஆகஸ்ட், 2015

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு:! விஜயகாந்த் நம்பிக்கை!

இடைப்பாடி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என சேலத்தில் விஜயகாந்த் தெரிவித்தார்.மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.அங்கு விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளேன். பாவம் கப்டன் டாக்டர்கள் இனி குடிக்க கூடாது லிவர் கிட்னி எல்லாம் பத்ரம்னு பயம் காட்டிட்டான்களோ? 
சசிபெருமாளின் குடும்பத்தினருக்கு, தே.மு.தி.க., எப்போதும் ஆதரவாக இருக்கும். அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால், இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படும் என தமிழக அரசு கூறியிருப்பது, நான் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, இளம்பிள்ளை பகுதியில் இருந்து காந்தியவாதி சசிபெருமாள் வீடு இருக்கும் இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதி வரை, நான்கு கிலோ மீட்டர் துாரம் விஜயகாந்த் தலைமையில், தே.மு.தி.க.,வினர் அமைதி பேரணி நடத்தினர் தினமலர்.com 

கருத்துகள் இல்லை: