புதிதாக வரும் மொபைல் போன்களை உடனே வாங்க தற்போது போட்டி போடும் பலரும்,
விரைவில் ஆளுக்கொரு ஆளில்லா விமானத்தை வாங்க போட்டி போடுவார்களோ? என்று
நம்மை யோசிக்க வைக்கிறார், நாசாவில் பணியாற்றும் இந்திய வம்சாவளி
விஞ்ஞானியான, பரிமல் கோபடேகர்.
'ஆளில்லா விமானங்களின் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை' என்ற
தலைப்பில் கடந்த வாரம் நாசா ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து
கொண்ட பரிமல் இது குறித்து பேசுகையில், "இன்னும் 5 முதல் 10 வருடங்களில்
அனைத்து வீடுகளிலும் ஒரு ஆளில்லா விமானம் இருக்கலாம். அப்படிப்பட்ட
எதிர்காலத்தை நான் உணர்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டின் மேற்கூரையைப்
பார்வையிட, சூப்பர் மார்க்கெட் சென்று ஸ்க்ரூ ட்ரைவர் வாங்க என்று பல
விஷயங்களுக்கு ஆளில்லா விமானத்தை பயன்படுத்தப் போகிறீர்கள்.
இதனால் வருங்காலத்தில் சாலைகளைப் போலவே வானத்திலும் டிராபிக் ஜாம் அதிகமாகிவிடும்" என்றார்.
நாசா உட்பட 125 நிறுவனங்கள் இணைந்து ஆளில்லா விமானப் பணிகளுக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளார் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக