திங்கள், 3 ஆகஸ்ட், 2015

நிர்வாணம் ஆபாசம் ஆகாது: கனடாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் மேலாடை இல்லாமல் ஊர்வலம்

கனடாவில் மேலாடை இல்லாமல் வெளியில் செல்லும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் மேலாடை இல்லாமல் ஊர்வலம் சென்றுள்ளனர். கனடா ஒண்டாரியோ மாநிலத்தில் பெண்கள் கட்டாயம் மேலாடை போட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்தவில்லை என்றபோதும் சென்ற மாதம் மேலாடை இல்லாமல் சென்ற  அலீஷா, தமீரா, நாதியா முகமது ஆகிய மூன்று சகோதரிகளை போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வாட்டர்லூ நகரத்தில் நூற்றுக்கணக்கானோர் மேலாடை இல்லாமல் ஊர்வலம் சென்றுள்ளனர். ஊர்வலம் சென்ற அந்த பெண்கள் கையில் ஏந்தியிருந்த அட்டையில் மார்பகங்கள்தான்; வெடிகுண்டுகள் அல்ல" என்றும், "நிர்வாணம் ஆபாசம் ஆகாது" என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் சுதந்திரமும் சம உரிமையும் இருபாலாருக்கும் வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். dinamani.com 

கருத்துகள் இல்லை: