வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

Pakistan10-ம் வகுப்பில் சீக்கிய மாணவி சாதனை

லாகூர், ஆக. 7- பாகிஸ்தானில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்த சீக்கிய மாணவி மன்பீர் கவுர் 1,100-க்கு 1,035 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில், அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தானில் உள்ள பிரபல சீக்கிய அமைப்பான பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது மேலும், படிப்பில் சிறந்து விளங்கும் சீக்கிய மாணவர்களுக்காக ஒரு நிதியை உருவாக்கியுள்ளதாக அறிவித்த அந்த கமிட்டி, இதற்கு முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடையையும் வழங்கி உள்ளது.


சாதனை மாணவி மன்பீர் கவுர், லாகூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அவருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஆக விரும்பும் மன்பீர், அதற்கு முந்தைய ப்ரீ-மெடிக்கல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்க  maalaimalar.com/

கருத்துகள் இல்லை: