ஈராகில் பிணையக் கைதியாக பிடித்துவைத்துள்ள 19 பெண்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சில
பகுதிகளை கைபற்றி அதை தனிநாடாக அறிவித்து உள்ளனர். தங்கள் பகுதியில்
வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக
வைத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை 'பாலியல் 'அடிமைகளாக
வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இவர்களை ஏலத்தில் விட்டு விற்பனை செய்து பணம்
ஈட்டுகின்றனர். பல பெண்கள் அவர்களது குடும்பத்தினருக்கே
விற்கப்பட்டுள்ளனர். பிணைத் தொகை பெற்றுக் கொண்டு இவர்களை ஒப்படைக்
கின்றனர்.
அடிமைகளாக வைத்திருக்கும் பெண்களை ஐ.எஸ்.
பயங்கரவாதிகளுடன் பாலுறவுக்கு கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கு மறுக்கும்
பெண்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என நீண்டநாட்களாக குற்றச்சாட்டுக்கள்
நிலவுகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 'உறவுக்கு மறுத்த 19
பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த
தகவலை குர்தீஸ் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் மிமோசினி
தெரிவித்துள்ளார். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக