ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது மத்திய அரசு தகவல்!


இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001–ம் ஆண்டு 1000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011–ம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில் உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து உள்ளது. மாநில அளவில் கேரளாவில் (950) தான் அதிக அளவு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது.


தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் புதிய ஆய்வின்படி மருத்துவ சிகிச்சையில் பெரும்பாலானவர்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சையைத்தான் விரும்புகிறார்கள். சுமார் 90 சதவீதம் பேர் இந்த சிகிச்சை முறைகளைதான் பெறுகிறார்கள். இதில் கிராமப்பகுதியில் 71 சதவீதமும், நகர்ப்புறங்களில் 78 சதவீதத்தினரும் உள்ளனர். 6 சதவீத மக்களே ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை பின்பற்றுவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. dailythanthi.com

கருத்துகள் இல்லை: