படம் பார்த்தவர்கள் ஐயோ அம்மா என்று பதறி ஓடினார்கள். எனில், பணம் போட்டு படம் எடுத்தவர்கள்? போட்ட பணத்தில் கால்வாசி வேண்டாம், கால் தூசியாவது திரும்பி வந்திருக்க வேண்டுமே? ம்ஹும்... அதுவும் இல்லையாம்.
படம் வெளியானால் ஓபனிங்கிலேயே பத்து கோடி வந்திரும், அப்பால ஒரு பத்து பதினைந்து கோடி. சேட்டிலைட் பத்து, எப்எம்ஸ் பத்து என்று பத்து பத்தாக கதை சொல்லி எட்டு கோடியை வாங்கிக் கொண்டாராம் காமெடி நடிகர். படம் வெளியாகி இந்நாள்வரை மொத்தமாக ஒரு கோடி வரவில்லையாம் தயாரிப்பாளர்களுக்கு.
காமெடின்னு நினைச்சு கண்ணி வெடியில் கால் வைக்க, சிதறிப் போய் கிடக்கிறது அவர்களின் பைனான்ஸ் ஸ்டேட்டஸ். பாவம்யா. கிசுகிசு எல்லாம் விபரமா சொல்ல முடியுமா ? நீங்களே மணந்து மணந்து கண்டுபிடியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக