நடிகை
ரகுல் பீரித் சிங்குக்கு கார் ஓட்ட தடை விதித்தார் அவருடைய தந்தை.தமிழில்
‘என்னமோ ஏதோ, ‘தடையற தாக்க, ‘புத்தகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர்
ரகுல் பிரீத் சிங். 2011ம் ஆண்டு சர்வதேச சுற்றுலா பிரிவில் இந்திய அழகி
பட்டம் வென்றவர். அவர் கூறியதாவது:தென்னிந்திய மொழி படங்களில் கவனம்
செலுத்தி வருகிறேன். நடிகையான பிறகு எனது சம்பாத்தியத்தில் கார்
வாங்கினேன். தற்போது நான் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். எனது
கார் மும்பையில் இருக்கிறது. அதை ஓட்ட வேண்டும் என்று துடித்துக்
கொண்டிருக்கிறேன். இன்னும் 4 மாதத்துக்கு ஐதராபாத்திலேயே இருக்க வேண்டி
இருப்பதால் காரை ஐதராபாத் அனுப்பவேண்டும் என்று என் தந்தையிடம் கேட்டேன்.
அவர் மறுத்துவிட்டார்.
கார் ஓட்ட அவசரப்பட வேண்டாம். பொறுமையாக இரு என்று தடைபோட்டுவிட்டார். அழகிபோட்டிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். அதற்கான துணை போட்டிகளில் 5 முறை நான் பட்டம் வென்றிருக்கிறேன். இதுவரை யாரும் இதுபோல் பெற்றதில்லை. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார். - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக