வெள்ளி, 13 ஜூன், 2014

ஈராக்கில் சதாம் ஹுசெயின் ஆதரவு படைகள் கடும் சமர் ! நகரங்களை கைப்பற்றுகிறார்கள் !

பாக்தாத்:ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசூலை கடந்த 2 நாட்களுக்கு முன் அல்கய்தா ஆதரவு சன்னி பிரிவு தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து திக்ரித், சமரா நகரங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா பிரிவு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வசித்து வருகின்றனர். இரு பிரிவினருக்கும் இடையே நடைபெறும் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு அதிபராக ஜலால் தல்பானியும் பிரதமராக நூரி அல்மாலிகியும் உள்ளனர்.
இந்நிலையில், ஈராக்கின் 2 வது மிகப்பெரிய நகரமான மசூலை கடந்த 2 நாட்களுக்கு முன் அல்கய்தா தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, தலைநகர் பாக்தாத்துக்கு அருகே உள்ள சதாம் உசேன் பிறந்த திகரித் நகரையும் கைப்பற்றினார்கள். சமரா நகரும் தீவிரவாதிகள் பிடிக்குள் வந்துள்ளது.
இந்த நகரங்களை மீட்க தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி தாக்குதல் நடந்து வருகிறது. அந்நகரங்களில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக பாக்தாத் நோக்கி வெளியேறி வருகின்றனர்.

அல்கய்தா ஆதரவு தீவிரவாதிகளுக்கு அரசு படைகளுக்கும் நடைபெற்ற மோதலில், அந்நகரங்களில் இருந்த குடிநீர் தொட்டிகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. அந்நகரங்களில் உள்ள மசூதிகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வெடிகுண்டு தாக்குதல் அதிகரித்து பொதுமக்களில் பலர் பலியாகும் சூழ்நிலை காணப்படுகிறது.மசூத் மற்றும் திக்ரித் போன்ற நகரங்களில் இருந்து பாக்தாத் நகரை நோக்கி வெளியேறிய மக்களுக்கு முகாம்கள் அமைத்து மருந்து பொருட்களையும் உணவு பொருட்களையும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அளித்து வருகின்றன என்று ஈராக் அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: