புதன், 11 ஜூன், 2014

இமாச்சல் அதிர்ச்சி விடியோ ! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்! 24 Hydrabad students swept away in Himachal


ஐதராபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் துறைசார்ந்தோர் உள்ளிட்டோர் 48 பேர் இமாசலபிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் 24 மாணவி-மாணவிகள் கடந்த 8-ந் தேதி மணலி அருகே தலோத் என்னும் இடத்தில் பியாஸ் ஆற்றின் கரையோரம் நின்றவாறு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது நீர் மின்உற்பத்திக்காக அங்குள்ள பந்தோ அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோரம் நின்று கொண்டிருந்த 6 மாணவிகள், 18 மாணவர்கள், சுற்றுலா பொறுப்பாளர் பிரகலாத் ஆகிய 25 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடும் பணி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த துயர சம்பவத்தின் நேரடி காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளன.  இந்த வீடியோவில் மாணவர்கள் தங்களுக்குள் உற்சாகமாக புகைப்படம் எடுத்த படி உள்ளனர். அப்போது உடனடியாக தீடிரென்று வந்த வெள்ளம் மணவர்களை ஆற்றில் அடித்து சென்றது. இந்த வீடியோ அருகில் இருந்த கடைக்காரர் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கடைக்கரார்கள் மாணவர்களை எச்சரிப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் மிக நீண்ட தூரம் நின்றதால் மாணவர்களுக்கு கேட்காமல் இருந்துள்ளது nakkheeran ,in

கருத்துகள் இல்லை: