சனி, 14 ஜூன், 2014

குஜராத் நானோ கார்தொழிற்சாலை மூடப்பட்டது ! மோடிக்கு விளம்பரம் அள்ளி கொடுத்தது இந்த TATA Nano தான் !

குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ உற்பத்தித் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மக்களின் கார் என்ற அறிவிப்புடன் கோலாகலமாக விற்பனையை ஆரம்பித்த இந்த வகை கார்களின் தேவை தற்போது மிகவும் குறைந்து காணப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கார்கள் உற்பத்தி செய்யக்கூடிய இந்த தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 21,538 கார்களே உற்பத்தி செய்யப்பட்டதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த உற்பத்தியில் 1௦ சதவிகிதம் கூட இல்லை. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் உட்பட அங்குள்ள கையிருப்பு 8 ஆயிரத்திலிருந்து 1௦ ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.


இதனால் கடந்த ஆறு மாதங்களாகவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே இந்தத் தொழிற்சாலை இயக்கப்பட்டு வந்துள்ளது. எனவே வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய நானோவை வெளியிடுவதற்கும் மாருதி செலேரியோவை ஒத்த டாடாவின் புதிய தயாரிப்பை இங்கு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் இந்தத் தொழிற்சாலையை 35 முதல் 4௦ நாட்களுக்கு மூடவிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய தயாரிப்பை வரும் 2௦15-ம் ஆண்டில் வெளியிட இந்நிறுவனம் உத்தேசித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இங்கு 2௦௦௦ முதல் 24௦௦ கார்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டுவந்த நிலையில் ஜூன் மாதத்திற்கென உற்பத்தி இலக்கு இல்லாமல் இருப்பது வியப்புக்குரிய விஷயமாகும். உற்பத்தியைத் தொடருவதன் மூலம் நஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளுவதைவிட தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியிருப்பதுவே நிறுவனத்திற்கு நன்மை பயக்கும்.

இதுபோன்ற சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் டாடா நிறுவனம் உள்ளது என்று சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் குறிப்பிட்டார்.

தங்களுடைய அனைத்துத் தொழிற்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் வருடாந்திரப் பராமரிப்பு மற்றும் மேம்பாடு போன்ற காரணங்களுக்காக நிர்வாகம் இந்தத் தொழிற்சாலையை மூடியுள்ளது என்றும் இது மீண்டும் செயல்படுவதற்கு 3-6 வாரங்கள் வரை ஆகலாம் என்றும் டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: