செவ்வாய், 10 ஜூன், 2014

வீட்டுக்கு வெள்ளை, நீலகலரில் பெயின்ட் அடித்தால் சொத்து வரிவிலக்கு: கோல்கட்டா மேயர் அதிரடி

கோல்கட்டா: வீட்டிற்கு, குடியிருப்பு கட்டடத்திற்கு நீலம் மற்றும் வெள்ளை
கலர்களில் பெயின்ட்அடித்தால் சொத்து வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் கோல்கட்டா மேயர் அறிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல்காங். கட்சியின் ஆட்சிநடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். அம்மாநில அரசியலில் "தீதி" என்றே அழைக்கப்படுகிறார்.இவருக்கு மிகவும் பிடித்த கலர் வெள்ளை மற்றும் நீல நிறம். நீல பாடர் போட்ட வெள்ளை கலர் சேலையை தான் எப்போதும் அணிந்திருப்பார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் திரிணாமுல் காங். ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தலைமை செயலகம், அரசு கட்டடங்கள் ,போலீஸ் ஸ்டேசன், அரசு போக்குவரத்து கழக பஸ்கள், பொது டாக்ஸிகள், ஆகியன மம்தாவிற்கு பிடித்தமான வெள்ளை, மற்றும் நீல கலராக மாற்றப்பட்டது.  இது நம்ம ஊரு புண்ணாக்கு மாதிரியே இருக்கு ....
இந்நிலையில் தலைநகர் கோல்கட்டாவில் நாகர் பஜார் பகுதியில் புதிய மேம்பாலம் திறப்பு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்ட மேயர் சோவன் சாட்டர்ஜி பேசுகையில் கோல்கட்டா மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள்,அப்பார்மென்ட்டுகள், வணிக வளாக கட்டடங்கள் ஆகியவற்றிற்கு அதன் உரிமையாளர்கள் நீல மற்றும் வெள்ளை கலரில் பெயின்ட் மற்றும் சுண்ணாம்பு அடித்தால் , சொத்துவரி விதிப்பில் இருந்து சலுகை காட்டப்படும். இதற்கான சட்ட வரைவு அரசின் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் 2014-15-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றார். மேயரின் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை: