மத்திய அரசு பரிசீலனை;கங்கை
நதியின் புனிதத்தன்மையைக் காக்கிற வகையில் அதைச் சுத்தம் செய்யும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி
பெற்ற உமாபாரதிக்கு மத்திய அமைச்சரவையில் நீர்வளம், கங்கை சீரமைப்பு
ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரியாக பதவி
ஏற்றுள்ள உமாபாரதி, கங்கையை சுத்தம் செய்ய சபதம் எடுத்துள்ளார்.
முதற்கட்டமாக, இது குறித்து நான்கு துறைகள் அடங்கிய ஆலோசனை கூட்டம்
நடந்தது. கங்கையில் யாராவது எச்சில் துப்பினால் அவர்களைப் பிடித்து ரூ.10
ஆயிரம் அபராதமும், சிறைத்தண்டனை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து
வருகிறது. இதேபோன்று கங்கையில் குப்பைகளைக் கொட்டவும் தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்ப உச்சாவுக்கு ? nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக