இனியாவது கோஷ்டிகளை ஒழித்துவிட்டு, ஒற்றுமையாக இருங்கள்.
கட்சியை காப்பாற் றுங்கள். இளைய சமுதாயத்தின் நலனுக்காக காமராஜர் ஆட்சியை
கொண்டுவர பாடுபடுங்கள்’’ என்று கெஞ்சிக் கேட்பதற்காக வந்த 77 வயது தியாகி
எம்.ஆர்.சந்திரன், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவரை சந்திக்க 7 மணி
நேரம் காத்திருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ்
கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 38 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது.
இதுகுறித்து ஆய்வு செய்ய மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக்
கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக் கிழமை நடந்தது.
அனுமதிக்காத நிர்வாகிகள்
இதுபற்றி கேள்விப்பட்டு காங்கிரஸ் தியாகியும், காங்கிர ஸின் முதல் சென்னை
மாவட்ட கலைஞர்கள் அணித் தலைவராக வும் இருந்த 77 வயது முதியவர்
எம்.ஆர்.சந்திரன் போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் இருந்து சத்தியமூர்த்தி
பவனுக்கு வந்திருந்தார். அடடே காங்கிரஸ் இன்னும்கூட மிட்டா மிராசு ஜமீந்தார் கட்சியாகவே இருக்குல!
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை நேரில்
சந்தித்துப் பேச முயன்றார். ஆனால். காங்கிரஸ் அலுவலக நிர்வாகிகள் அவரை
உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனால், சத்தியமூர்த்தி பவனில் அறிவிப்புப் பலகை உள்ள இடத்தில்
கைத்தடியுடன் காத்திருந்தார். காலை 10 மணிக்கு வந்த அவர், மாலை 5 மணி வரை
காங்கிரஸ் தலைவரை சந்திக்க முடியவில்லை. அவரும் சோர்ந்துவிடவில்லை.
தள்ளாமை யையும் பொருட்படுத்தாமல் தைரியத்துடன் காத்திருந்தார்.
‘55 ஆண்டுகளாக காங்கிரஸ்காரன்’
அவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது: நான் 55 ஆண்டுகளுக்கு மேலாக
காங்கிர ஸில் எந்தக் கட்சியும் மாறாமல், எந்தக் கோஷ்டிக்கும் செல்லாமல்
இருக்கிறேன். வில்லுப்பாட்டு பாடி, நாடகங்களில் நடிக்கும் கலைஞனான நான்,
முன்னாள் முதல்வர் காமராஜர் கையாலும், கக்கன் கையாலும் பரிசுகள்
வாங்கியிருக்கிறேன்.
கப்பலோட்டிய தமிழன், வெள்ளையனே வெளியேறு போன்ற நாடகங்களில் நடித்துள் ளேன்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காமராஜரின் உற்ற நண்பருமான பாரா என்றழைக்
கப்படும் பா.ராமச்சந்தி ரன் என்னை நாடக சின்னக் கலைவாணர் என்றுதான் அழைப்
பார். அவர்தான் என்னை, காங்கிரஸின் உள் அமைப்பான கலைஞர் (நடிகர்கள்)
காங்கிரஸ் சென்னை மாவட்டத் தலைவராக நியமித்தார்.
தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு
கோஷ்டி எனப் பல கோஷ்டிகளாக உள்ளது. இத்தனை கோஷ்டிகள் இருப்பது தான்
கட்சியின் படுதோல்விக்கு காரணம். கோஷ்டித் தலைவர்கள் எல்லோ ரும்
ஒற்றுமையாகச் சேர வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும். மறுபடியும் இளைய
சமுதாயத்தின் நன்மைக்காக காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்.
இனியாவது இதற்கு பாடுபடுங் கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காக
தலைவரை சந்திக்க வந்தேன். அவர் முக்கிய மான கூட்டத்தில் இருப்பதாக
சொல்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்கள் உட்கார்ந்தாவது
பார்த்துவிடுவேன்.
இவ்வாறு அந்த உண்மையான காங்கிரஸ் அனுதாபி எம்.ஆர்.சந்திரன் கூறினார்.
பதவி, அதிகாரத்துக்கு ஆசைப் பட்டு பல்வேறு கோஷ்டிகளாக காங்கிரஸ் பிரிந்து
கிடக்கும் நிலையில், தன்னலமற்ற தியாகி கள் இன்னமும் ஒரு சிலர்
இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரன் போன்றவர்கள் உதாரணம். பிளந்துகிடக்கும்
கோஷ்டிகள் இதை உணருமா? tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக